பினாங்கு இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் அண்மையில் பினாங்கு சாலையில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் வசதி குறைந்த
பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரண பொருட்களுக்கான பற்றுச்சீட்டு அம்மன்றத்தின் தலைவர் திரு.வெ.நந்தகுமார் எடுத்து வழங்கினார்.
பினாங்கின் தீவுப்பகுதி மற்றும் பெருநிலத்தில் வாழும் வசிக்கும் வசதிக்குறைந்த 50 பள்ளி மாணவர்களுக்கு ரிம 80 முதல் ரிம 100-க்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட்டன. மேலும் அடுத்தாண்டு இன்னும் அதிகமான மாணவர்களுக்கு இப்பறுச்சீட்டு வழங்க இணக்கம் கொண்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இந்து தர்ம மாமன்ற பினாங்கு மாநில தலைவர் திரு.வெ.நந்தகுமார்.