சில்லி நாட்டின் அதிபரும் , ஐக்கிய நாடுகளின் தலைவருமாகிய “மிசெல் பெசெலட்’ இவ்வாறு கூறியுள்ளார். “என்னைப் பொறுத்தவரை, ஒரு சிறந்த ஜனநாயகம் என்றால் பெண்கள் வாக்களிக்கவும் மற்றும் தேர்ந்தெடுக்க மட்டுமே உரிமைக் கொடுப்பதல்ல, மாறாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்”
கடந்த 26 மற்றும் 27 ஆகஸ்ட் 2016, பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பினாங்கு “இன்ஸ்டிட்யூட்” இணைந்து தேசிய மாநாடு, “பாலினம் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் : மாற்றம் பெற என்ற தலைப்புகளில், பெண் உரிமைகள் மற்றும் பெண்கள் தேர்வுப் பெற : அதாவது அரசியலில் பெண்கள் முடிவெடுக்கும் பொறுப்புகளில் கணிசமான முறையில் பிரதிநிதித்துவம் அதிகரிக்க விவாதிக்கப்பட்டது . இம்மாநாட்டிற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மலேஷியாவிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவையினர், உள்ளூர் கவுன்சிலர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிஞர்கள் என சுமார் 200 பேர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த தேசிய மாநாட்டில் பாலினம், அரசியல் மற்றும் தேர்தல் முறைகளில் சீர்திருத்த பிரச்சனைகளைக் களைவதற்கும் அரசியல், நிறுவனம் மற்றும் கலாச்சார சீர்திருத்தம் நல்ல நடைமுறைகளைப் பரிந்துரைக்கவும், ஆராயவும் மற்றும் உத்திகளை அடையாளம் காணவும் அதே சமயத்தில் மலேசிய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம், பங்கேற்பு வலுப்படுத்தும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டு நாட்களாக தீவிர விளக்க கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்குப் பின், பெண்களின் முன்னேற்றம் மற்றும் பிரதிநிதித்துவம், ஒரு வலுவான ஆரோக்கியமான ஜனநாயகத்தை நோக்கி பயணம் செய்ய “ஒரு பெண்னின் வேலை” அல்ல மாறாக “அது அனைவருக்கும் அமைவதாகும்” பெண்களின் உரிமை வாக்களிப்பதில் நின்றுவிடாமல் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், இந்நிலையை அடைய படிபடியாக பல்வேறு துறைகளின் ஆதரவும் பெண்களுக்கு தேவையான சூழல், கலாச்சார, அரசியல் மற்றும் முறையான மாற்றத்தின் மூலம் செயல்படுத்த இயலும். இம் மாநாட்டில் மாற்றத்தின் நடவடிக்கை மற்றும் அரசியலில் முடிவெடுக்கும் பெண்களின் கணிசமான பிரதிநிதித்துவம் அதிகரிக்க ஒரு கூட்டான பரிந்துரைதொகுப்பு தயாரிக்கப்படுள்ளன. : இம்மாநாட்டின் பரிந்துரைகள் :
1. ஒவ்வொருப் பங்கேற்பாளரும் உறுதியான நடவடிக்கை எடுக்க பயிற்சி / உரையாடல் / பட்டறை ஏற்பாடு செய்ய வேண்டும் அரசியல் கட்சி, தொகுதி, மற்றும் நிறுவனம் முடிவெடுக்கும் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் பாலினம் ஒதுக்கீடுகள் மற்றும் தேர்தல் முறை மாற்றம் தேவை
2. ஒவ்வொரு அரசியல் பங்கேற்பாளரும் தனது கட்சியிலிருந்து குறைந்த பட்சம் 30% பெண்களை “JKKK” மற்றும் உள்ளூர் அதிகாரிகளாகவும் மற்றும் 30 % மாநில மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பார்களாக பரிந்துரைக்கப்பட வேண்டும்
3, ஒவ்வொரு அரசியல் கட்சிகளில் சேர்ந்த பங்கேற்பாளரும் கட்சியில் பெண் உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும். கட்சியில் ஆண்/பெண் ஒன்றிணைந்து திறமையான ஒரு பெண் வேட்பாளர்க்கு பரிந்துக்க வேண்டும் மற்றும் அவர்களுக்காக பரப்புரைச் செய்ய வேண்டும்.
4. மத்திய அரசு மற்றும் மாநில அரசாங்கமும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமநிலையிலான பொது நிதியுதவி வழங்கவேண்டும்
5. அந்த நிதியுதவி பெண் வேற்பாளர்களுக்கு ஆதரவாக அமையும்
6. இந்த பரிந்துரைகள் தொடர ஒரு பன்-பிரிவு வழிக்காட்டி குழு அமைக்கப்பட வேண்டும்
பெண்களுக்கு இடையூராக அமைவது பெண்கள் மேம்பாடும் மற்றும் பாலின சமத்துவம், குறிப்பாக தேர்தல் முறையிலும். இதை முக்கிய மைல்கல்லாக கொண்டு இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதுப்போன்ற விவாதத்தைக் கொண்ட முதல் மாநாடாக இம்மாநாடுத் திகழ்கிறது. மாநாடு முடிவடைந்தப் போதும் , அதன் பயண போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இப்பயணம் நேர்மையான மற்றும் அனைவருக்கும் சமத்துவமான ஒரே ஒரு பாலின ஆதிக்கமில்லமல் ஒரு சிறந்த மற்றும் நேர்மையான ஜனநாயாகம் உருவாக்க நடத்தப்படும் பயணமாகும்