இவ்வாண்டுக்கான தவணைக்கு தொடங்கப்பட்டுள்ள பாலின சமத்துவம் கொள்கை 40:40:20 என ஆண் பெண் இருபாலரும் கொள்கையை உருவாக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 40 சதவீதம் பெண்கள், 40 சதவீதம் ஆண்கள் மற்றும் 20 சதவீதம் பெண் & ஆண் என அனைவரும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுக்கும் நோக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பினாங்கு மாநில அரசு பாலின சமத்துவ கொள்கை அமலாக்கத்தில் பிற மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கும் என்பது வெள்ளிடைமலை.
பாலின சமத்துவ கொள்கை பினாங்கு 2030 கொள்கை அடிப்படையில் அனைத்து தரப்பினரும் பாலின பாகுப்பாடு இன்றி ஒருவருக்கொருவர் மதிப்பளிக்க வாய்ப்புகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படும்.
இந்நிகழ்வினில் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாகி ஒங் பீ லெங், மாநில சட்டமன்ற உறுப்பினர்களான தே லாய் ஹெங், லீ கை லூன், ஒங் ஆ தியோங், லிம் சியூ கிம், ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.