ஜார்ச்டவுன் – பாலின சமத்துவத்தை செயல்படுத்துவதன் மூலம் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டில் எந்தக் குழுவும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. இது பொதுச் சேவை துறைகளிலும் அதிக பொது நம்பிக்கையை வளர்க்கிறது.
மாநில சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம், சமூக இடைவெளிகளை நிவர்த்தி செய்ய பொதுச் சேவைகள் முழுவதும் பாலின சமத்துவத்தை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அண்மையில் பினாங்கு டிஜிட்டல் நூல்நிலையத்தில் நடைபெற்ற பினாங்கு பாலின சமத்துவ கொள்கை
Penang Gender Inclusiveness (DKG)
குறித்த உரையாடல் அமர்வில் பேசிய லிம், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொதுச் சேவை துறை அதிகாரிகளும் (PFP) ஈடுபட்டனர், என்றார்.
“பாலின சமத்துவம் நல்ல நிர்வாகத்துடன் இணைந்தால், மக்களின் உண்மையான தேவைகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய கொள்கைகள் மற்றும் ஒதுக்கீடுகளை நாம் உருவாக்க முடியும்.
“பாலினப் பொறுப்பு மற்றும் பங்கேற்பு பட்ஜெட் (GRPB) திட்டம் இப்போது மலேசியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற உள்ளூர் அரசாங்கங்களுக்கு வழிகாட்டியாக மாறியுள்ளது.
“PWDC, ஐக்கிய நகரங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் ஆசிய-பசிபிக் (UCLG-ASPAC) இடையிலான ஒத்துழைப்பு மூலம், பினாங்கின் உள்ளூர் அரசாங்கம் GRPB திட்டத்தை பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கான அளவுகோலாக ஏற்றுக்கொண்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
PFP DKG இன் பங்களிப்பு ஜெர்மனியின் ‘பாலின மையப்புள்ளிகள்’ (Gender Focal Points) முன்முயற்சி திட்டத்தால் ஈர்க்கப்படுகிறது என்றும் லிம் பகிர்ந்து கொண்டார்.
“ஜெர்மனியின் அணுகுமுறையைப் போலவே, அந்தந்த துறைகளில் பாலின நிபுணர்களாக பொதுச் சேவை துறை அதிகாரிகள் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம். வழிகாட்டும் அமைப்பாக பணியாற்ற டி.கே.ஜி குழுவினரை அமைப்பதில் எனது குழுவும் செயல்பட்டு வருகிறது,” என்று அவர் விளக்கமளித்தார்.
“முன்மொழியப்பட்ட DKG குழுவில், 35 அரசு துறைகள், மாநில ஏஜென்சிகள் மற்றும் இரண்டு உள்ளூர் அரசாங்கங்களை உள்ளடக்கிய DKG செயல் திட்டம் குறித்த புதுப்பிப்புகளை துறைத் தலைவர்களுக்கு வழங்குவதற்கான ஒரு தளமாக செயல்படும்.”
இதற்கிடையில், PWDC பாலின உள்ளடக்கம் பிரிவுத் தலைவர் ஹசிகா நசிரா சோல் பஹாரி பாலின உள்ளடக்கிய கொள்கையின் மூன்று பிரிவுகளை கோடிட்டுக் காட்டினார்: கொள்கையை நிறுவனமயமாக்குதல் (2019-2021), நிறுவனமயமாக்கல் நடைமுறைகள் (2022-2026) மற்றும் நிலைத்தன்மையை நிறுவனமயமாக்குதல் (2027-2030) ஆகியவை அடங்கும்.
PWDC தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஓங் பீ லெங் கலந்து கொண்டார்.