பினாங்கு மாநில அரசு அவ்வாட்டார மக்களை மிதிவண்டி ஓட்டும் பழக்கத்தை ஊக்குவித்ததால் தற்போது அதிகமானோரிடம் பிரசித்திப்பெற்றுள்ளது. பொதுமக்களிடையே இன்னும் அதிகமாக மிதிவண்டி ஓட்டும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பாலேக் புலாவில் பினாங்கு மிதிவண்டி சங்கமும் தூய்மை மற்றும் பசுமை விளையாட்டு மன்றமும் இணைந்து பாலேக் புலாவ் எக்ஸ்புளோரர் (Balik Pulau Explorer) மற்றும் மூன்ஸ்தர் மலை ஏறும் சவால்(Monster Climb Challenge) வரும் மே மாதம் நடத்தப்படவிருப்பதாக இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் சோங் எங் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
பாலேக் புலாவ் எக்ஸ்புளோரர் (Balik Pulau Explorer) மே 2-ஆம் திகதி மாலை 5 மணிக்கு பாலேக் புலாவ் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி பங்கேற்பாளர்கள் கிராம சுற்றுப்புற சூழ்நிலைகளையும் அவர்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் கண்கவர் இயற்கை அழகையும் கண்டு மகிழவும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. அதோடு, மூன்ஸ்தர் மலை ஏறும் சவால்(Monster Climb Challenge) மே 3-ஆம் திகதி காலை 7.00மணிக்கு அதே இடத்தில் நடைபெறவுள்ளது. இதில் போட்டியாளர்கள் 42 கி.மீ தூரத்தை மிதிவண்டியில் கடக்க வேண்டும். போட்டியாளர்கள் வயது வாரியாகவும் மற்றும் மிதிவண்டி வகையை பார்த்தும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுவர். வெற்றியாளர்களுக்குப் பதக்கமும் மற்றும் இதர பரிசும் வழங்கப்படும்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஆட்சிக்குழு உறுப்பினர் இவ்விரண்டு விளையாட்டுகளின் வழி பினாங்கு மாநில கோட்பாடான “தூய்மை, பசுமை மற்றும் சுகாதாரம்”, நிலைநிறுத்தப்படுகிறது என்றார். பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பதோடு வளர்ந்து வரும் சந்ததினருக்கும் அதன் முக்கியத்துவத்தை இளமையிலேயே புகுட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இப்போட்டியில் பங்கேற்க அதிகமான இந்திய இளைஞர்கள் வரவேற்கப்படுகின்றனர். 14 வயதிலிருந்து முதியவர் வரை இப்போட்டிகளில் பங்கேற்கலாம். விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்ப ரிம80 முதல் ரிம150 வரை பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். போட்டியாளர்கள் மேல் விபரங்களுக்கு +6011 1187 6238 தொடர்புக்கொள்ளலாம் அல்லது penangevents.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரவும்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);