பினாங்கின் பத்தாண்டு வரலாற்றை நிலைநிறுத்த தொடர்ந்து பாடுப்பட வேண்டும் – மாநில முதல்வர்

Admin
புதிய பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்களுடன் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ சாகியுடின் பின் அப்துல் ரஹ்மான், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.

 

 

புதிய பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்களுடன் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ சாகியுடின் பின் அப்துல் ரஹ்மான், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.

பினாங்கு மாநகர் கழகம் பத்தாண்டுகளில் சிறந்த சேவையின் மூலம் பினாங்கு மாநிலத்தில் அனைத்துலக ரீதியில் அங்கீகரித்துள்ளது என்பது பாராட்டக்குரியதாகும். தூய்மை, பசுமை, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியான பினாங்கு மாநிலத்தின் கோட்பாடு அனைத்துலக அங்கீகாரத்தின் சிறந்த அடையாளமாக திகழ்கிறது. எனவே, பினாங்கின் இந்த பத்தாண்டு சாதனை வரலாற்றை நிலைநிறுத்த பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்கள் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வின் சிறப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்.

மேலும், கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தின் 68 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருனான சாவ் கேட்டுக் கொண்டார். பினாங்கு மாநகர் கழகமும் மாநில அரசுடன் ஒத்துழைத்து இந்த வாக்குறுதிகளை செவ்வன நிறைவேற்ற வேண்டும் எனவும் பரிந்துரைத்தார் மாநில முதல்வர்.

ஜுலை 2018 முதல் டிசம்பர் 2019-க்கான தவணைக்கு 24 பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்கள் மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 14 பேர் புதிய உறுப்பினர் என்பது குறிப்பிடதக்கதாகும். ஹரிகிருஷ்ணன் த/பெ இராமகிருஷ்ணன், காளியப்பன் த/பெ ரெங்கநாதன் மற்றும் வினோதினி த/பெ சந்திரேசன் பிச்சை ஆகியோர் இந்தியர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முறை பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தி அதிகமான பெண்கள் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்கள் நியமன நிகழ்வில் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ சாகியுடின் பின் அப்துல் ரஹ்மான், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பினாங்கு மாநகர் கழகம் பசுமைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு சான்றாக அடிப்படை கழிவுகளில் இருந்து தனிமைப்படுத்தும் திட்டத்திற்கு பின்னர் உறிஞ்சுகுழாய் அற்ற மாநிலமாக உருமாற்றம் காண்கிறது. இதிலிருந்து நெகிழிப்பைக்கு முற்றாக தடை விதிக்கப்படும். இதனிடையே, மேலும் 12,000 மின் விளக்குகள்(LED) பினாங்கு மாநில சாலை விளக்குகளில் பொருத்தப்படும்.

மேலும், பினாங்கு மாநிலத்தில் முழுமையாக தொழில்நுட்பம் சார்ந்த மாநிலமாக மாற்றியமைக்க தொழிற்துறை புரட்சி 4.0 முழுமையாக அமல்படுத்தப்படும். தரமான சேவையை வழங்க பினாங்கு மாநகர் கழகம் 44 ஒருங்கிணைப்பு அமைப்புகளை பயன்படுத்தவுள்ளது. இதனிடையே, மேலும் 761 இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பினாங்கு மாநிலம் முழுவதும் பொருத்தப்படவுள்ளது. இதன் மூலம் பினாங்கு மாநிலத்தில் குற்றச்செயல்களை குறைக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதையும் உறுதிப்படுத்துவதோடு பினாங்கு காவல்துறையினருடன் இணைந்து செயல்பட பினாங்கை பாதுகாப்பான மாநிலமாக பிரகடனப்படுத்த முடியும்.

பினாங்கு மாநகர் கழகம் மக்களின் கருத்துகளையும புகார்களையும் செவிமடுக்க மின்-புகார் திட்டத்தை ‘ Wechat’ மற்றும் ‘iKepoh’ தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி பினாங்கு மாநகர் கழகத்திற்கு உடனுக்குடன் அனுப்பலாம். வெள்ளம், மண்சரிவு, இயற்கை சீற்றம் மற்றும் பல அவசர பிரச்சனைகளை உடனுக்குடன் பினாங்கு மாநகர் கழகத்திடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.