பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டம் களைகட்டியது– முதலமைச்சர்

Admin
img 20240124 wa0078

ஜார்ச்டவுன் – பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் 238-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சட்டிப்பூசம் என்று அழைக்கப்படும் முதல்நாள் கொண்டாட்டத்தில் இன்று பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், இரண்டாம் துணை முதல்வர் ஜக்தீப் சிங் டியோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், ஆலய நிர்வாகத்தினருடன் தண்ணீர் பந்தலுக்கும் வருகை மேற்கொண்டு இந்தியர்களுக்கு தைப்பூச வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

பினாங்கு மாநில தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிள் வருகையளிப்பது இத்திருவிழாவின் சிறப்பம்சம் என முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.

img 20240124 wa0079

அரசு நிறுவனங்கள் போக்குவரத்து சீராக இயங்குவதை உறுதி செய்வதோடு பொது மக்களின் பாதுகாப்பையும் சிறந்த முறையில் கண்காணிப்பதற்குத் தமது பாராட்டினைத் தெரிவித்தார்.
மேலும், ஆலய நிர்வாகத்தினர் தைப்பூசக் கொண்டாட்டத்தை சிறந்த முறையில் ஏற்பாடுச் செய்ததற்கும் பாராட்டினார்.

மூன்று நாட்களுக்கு அனுசரிக்கப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு 1.5 மில்லியன் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் திரளுவர் என எதிர்ப்பார்க்கப்படுறது.

இந்த ஆண்டு மக்களின் தாகம் மற்றும் பசியைப் போக்கும் வண்ணம் அதிகமான தண்ணீர் பந்தல்கள் நிறுவப்பட்டுள்ளன.

img 20240124 wa0071

இந்த அனைத்து தண்ணீர் பந்தல்களுக்கும் மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் வருகையளித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.