பினாங்கில் கடந்த ஏழு ஆண்டுகளாக கூடுதலாக 3.1% பொது மக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கீழே காணப்படும் அட்டவனை பினாங்கில் 2010 முதல் 2015 -ஆம் ஆண்டு வரை அதிகமானோர் வேலையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள புள்ளிவிபரத்தை காண்பிக்கிறது. இதன் மூலம் பினாங்கில் அதிகமான வேலை வாய்ப்புகள் இடம்பெறுவது உறுதியாகிறது என சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடர் தொகுப்புரையில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்
பினாங்கு மாநில அரசு கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை கல்வியில் சிறந்து விளங்க பினாங்கு மேம்பாட்டுக் கழகம்., பினாங்கு திறன் மேம்பாட்டு மையம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் , அரசு மற்றும் அரசு சாரா கல்லூரிகளுடன் இணைந்து மனித வளத்தை மேம்படுத்த பல பயிற்சிகள் வழங்குவதாக பேராசிரியர் தெரிவித்தார்.
பி.எஸ்.டி.சி மையம் உயர் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்குவதன் மூலம் பினாங்கு மாநில நிபுணத்துனம் சார்ந்த வேலையிடங்களைப் பூர்த்திச் செய்ய துணைபுரிகிறது . மாநில அரசு முதலீடு பினாங்கு (investPenang) மூலம் பல முதலீட்டுச் செயல் திட்டங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெற சந்தை ஆலோசகர் மையம், பயிற்சி பட்டறைகள் ( (SME Market Advisory, Resource & Training – S.M.A.R.T. Centre) மேற்கொள்கிறது.
மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஜெர்மன் தொழிற்துறை பயிற்சியில் 63 பேர் பங்கெடுத்துள்ளனர். பங்கேற்பாளர்கள் பன்னாட்டு நிறுவனங்களான பி பிராவுன், ஒஸ்ராம், இனாரி மற்றும் பல நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..