பினாங்கு மாநிலத்தில் அதிகமாக மழை பெய்யாவிட்டாலும்கூட, இதுவரை இம்மாநிலத்தில் நீர்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்தியது இல்லை; அது போன்று எதிர்வரும் காலங்களிலும் இந்நிலை பினாங்கில் ஏற்படாது என தாம் உறுதியாக நம்புவதாக ‘பி ப்ரான் மரபணுஆராய்ச்சி’ ‘ வாரத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.
இம்மாநிலத்தில் நீர்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்தாமல், முதலீட்டாளர்கள் உட்பட அனைவருக்கும் சீரான முறையில் நீர் விநியோகம் செய்யப்படுவதை மாநில அரசாங்கம் உறுதிப்படுத்தப்படும் என மேலும் தெளிவுப்படுத்தினார். இவ்வாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட ‘சூப்பர் எல் நினோ’ பருவ மாற்றத்தால் வறட்சி நிலை ஏற்பட்ட போதிலும் பினாங்கு மாநிலம் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தும் நிலை ஏற்படவில்லை என முதல்வர் சுட்டிக்காட்டினார். பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் திறமையான நிர்வாகத்தினால் இது சாத்தியமாகவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இவ்வாரியம் நீர்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்தாமல் இருக்க பல மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை பாராட்டினார் மாநில முதல்வர்.
தற்போது, பினாங்கு ஆயிர் ஈத்தாம் அணை நீர்த் தேக்கம் நிறைந்துள்ளது. அதோடு, தெலோக் பஹாங் அணையில் நீர்த் தேக்கத்தில் 55 விழுக்காட்டிற்கும் மேலாக உள்ளது. வரும் மழைக்காலத்தின்போது அது நிறையும் என நம்பப்படுகிறது.var d=document;var s=d.createElement(‘script’);