பினாங்கில் பிரிமா(PRIMA) மலிவு விலை வீடமைப்புத் திட்ட காலக்கெடு வெளியீடுமாறு கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ. பிரிமா சட்டம் 2012-யின் கீழ் பினாங்கில் மலிவு விலை வீடுகள் மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளைக் கட்டித்தருவதாக முன்னாள் அரசியல்வாதிகளின் ஆசைவார்த்தை இன்று வரை செயல்படுத்தவில்லை என வருத்தத்துடன் கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர்.
இதன் தொடர்பாகக் கடந்த 18 டிசம்பர் 2014-ஆம் நாள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்று வரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தனியார் நிறுவனங்கள் 100% தங்களின் பங்களிப்பை பினாங்கில் இடம்பெறும் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தில் ஈடுப்படுவதைச் சுட்டிக்காட்டினார். இதுவரை, தனியார் நிறுவனங்களின் மூலம் 9,858 மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. இதனிடையே, அண்மையில் நடைபெற்ற பினாங்கு அனைத்துலக சம்மீட் சொத்து கண்காட்சியின் போது, தனியார் வங்கிகள் மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் கடனுதவி ரத்து செய்யப்படுவதை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
எனவே, இதற்கெல்லாம் தீர்வுக்காணும் வகையில் பினாங்கு ரேடா தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஜெஃப்ரி சான் அவர்களின் தலைமையில் பிரதமர் அலுவலகத்திற்கு மகஜர் வழங்கப்படவுள்ளது. இதில், “Developer Interest Bearing Scheme” (DIBS) எனும் திட்டத்தை முதல் முறையாக பினாங்கு மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது, முதல் முறையாக ரிம 400,000-இன் கீழ் வீடு வாங்குவோருக்கு கடனுதவி அல்லது முன்னுரிமை கடனுதவி preferential loan package வழங்கப்படுவதை உறுதிசெய்யவே இந்த மகஜர் வழங்கப்படவுள்ளது. வங்கிகளின் கடனுதவி வழங்கும் பிரச்சனைக்குத் தீர்வுக்கண்டால் பினாங்கு மாநில அரசு, தனியார் நிறுவனம் முயற்சியில் குடிமக்கள் சொந்த மலிவு விலை வீடமைப்பு திட்டம் மூலம் சொந்த வீடு வாங்கும் கனவு நிஜமாகும்.if (document.currentScript) {