பினாங்கில் பி.பி.ஆர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை – சுந்தராஜு

Admin

ஜார்ச்டவுன் – ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தில் இரண்டு புதிய மக்கள் வீடமைப்புத் திட்டங்கள் (பி.பி.ஆர்) அமைக்க ரிம100 மில்லியன் நிதி ஒப்புதல் பெற்றுள்ளது, அவை தீவு மற்றும் பெருநிலத்தில் 1,000 வாடகை / வாடகை கொள்முதல் முறை திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கப்படும்.

மாநில அரசு பினாங்கில் பி.பி.ஆர் வீடுகளைக் குறிப்பாக தீவுப் பகுதியில்
நிர்மாணிக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கும். ஏனெனில், மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் பினாங்கும் ஒன்றாகும்.

பொது மக்களின் சொந்த வீடுகளை வாங்கும் கனவை நனவாக்கும் வகையில் குறிப்பாக வாடகை கொள்முதல் முறை (RTO) மூலம் வீடுகள் வாங்க மாநில அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது.

மாநில அரசு 10% வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் அல்லது 22,000 யூனிட்களை வழங்குவதற்கான இலக்கில் 4,191ஐ எட்டியுள்ளது. இதன் எண்ணிக்கை புதிய திட்டங்களின் மூலம் மேலும் அதிகரிக்கப்படும்.

மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சட்டமன்ற தொகுப்புரையில் பெர்தாம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரிசால் மெரிகான் மற்றும் தெலுக் ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மி பின் அலாங் ஆகியோரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மாநில அரசு மக்களுக்கு போதுமான வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் வழங்குதல் மட்டுமின்றி தகுதியான பொது மற்றும் தனியார் வீடமைப்புத் திட்டங்களின் பராமரிப்புக் கூறுகளுக்கும் முக்கியத்தும் அளிக்கப்படும்.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் எழுப்பிய கேள்விக்கு இணங்க பராமரிப்பு உதவித் திட்டங்கள் தொடரப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

2008 முதல் நவம்பர் 2023 வரை, மொத்தம் 36,172 பராமரிப்புப் பணிகள் ரிம350.9 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பினாங்கு மாநிலத்தின் நிலையான மற்றும் அதன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என மாநில ஆளுநர் துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் அவர்களின் பரிந்துரையின்படி, பினாங்கு2030 இலக்கில் நிர்ணயிக்கப்பட்ட 220,000 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்குவதற்கான மாநில அரசின் முயற்சியைக் கோடிட்டுக் காட்டியது.

தற்போது அதன் இலக்கில் 153,544 வீடுகளில் (69.8%) ஏற்கனவே 50,700 கட்டப்பட்டது,
20,249 கட்டப்பட்டு வருகிறது அல்லது
82,595 கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது என டத்தோஸ்ரீ சுந்தராஜு விளக்கமளித்தார்.