ஜார்ச்டவுன் – மாநில அரசு நில வரி மதிப்பாய்வை மேற்கொள்ளவிருக்கிறது. இதில் பினாங்கின் நகர் மற்றும் புறநகர் நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு
வருகின்ற 2026,ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.
முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1994 ஆண்டு பினாங்கில் நில வரியின் கடைசி மதிப்பாய்வு செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு தேசிய நில கழகத்திற்கு கட்டாய விண்ணப்பம் செய்யப்பட்டது என்று கூறினார்.
“இதுவரை, சுரங்க நில அலுவலகம் மற்றும் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் பணிக்குழுவால் பினாங்கில் 370,000 நில உரிமைகள் சம்பந்தப்பட்ட மறுஆய்வு செயல்முறை நடந்து வருகிறது.
“இந்த மறுஆய்வு செயல்முறை 2025 ஆண்டு இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் மாநில சட்டமன்றத்தில் 2025 வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் போது இதனைத் தெரிவித்தார்.
நிதி, நில மேம்பாடு மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், பல்வேறு காரணிகள் மற்றும் பிற பங்குதாரர்களைக் கருத்தில் கொண்டு, வரி மறுஆய்வு செயல்முறை மற்றும் கிராமப்புற நிலங்கள் நகரத்திற்கு ஏற்ப வகைப்பாடு ஆகியவை செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, வரி மறுஆய்வு செயல்முறை மற்றும் புறநகர் மற்றும் நகர்ப்புற நிலங்களை வகைப்படுத்துவது மாநில அரசின் நில வரி வருவாயை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.
2026 ஆம் ஆண்டிலிருந்து ரிம50 மில்லியன் முதல் ரிம100 மில்லியன் வரை வரி வருவாய் அதிகரிக்கப்படும்.