ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில்
மத்திய அரசு இதுவரை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு (KPKT) மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகள் மூலம் 12.8 சதவீதம் அல்லது 5,897 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் (RMM) மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
பினாங்கில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொறுப்பை மத்திய அரசாங்கமும் ஏற்க வேண்டும் என வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ கூறினார்.
“வரி வருவாய் மற்றும் முதலீட்டில் பினாங்கு மாநிலத்தின் பங்களிப்பை மத்திய அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
“பினாங்கு மாநிலத்தில் வீடுகளின் தேவை அதிகமாக இருப்பதால் இந்த முயற்சியை மேம்படுத்த கூடுதல் பட்ஜெட் ஒதுக்கப்பட வேண்டும்.
“வாடகை வீடுகளை வழங்குவதற்கான பினாங்கின் கோரிக்கையும் மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
“பினாங்கில் வீடமைப்புத் திட்டம் கட்டுவதற்கு நிலப் பற்றாக்குறை ஏற்படுவதால் மத்திய அரசாங்க நில வங்கிக்குச் சொந்தமான நிலத்தை வழங்க முன் வர வேண்டும்,” என்று 14வது சட்டமன்ற ஐந்தாம் தவணை முதலாம் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
ஜாவி மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மோய் லாய் அவர்களின் கேள்விக்கு ஜெக்டிப் இவ்வாறு பதிலளித்தார்.
பினாங்கு மாநில அரசு 2018 முதல் இதுவரை 136,333 பல்வேறு வகையான வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் பல்வேறு கட்டுமான நிர்மாணிப்பில் உள்ளன.
“இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, ஏ, பி மற்றும் சி வகைகளில் மொத்தம் 45,903 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன; 18,354 யூனிட்கள் பல்வேறு கட்ட கட்டுமானப் பணிகளில் உள்ளன, மீதமுள்ள 72,076 யூனிட்கள் திட்டமிடல் கட்டத்தில் உள்ளன,” என்று அவர் கூறினார்.
நம்பிக்கை கூட்டணி மத்திய அரசாங்கத்தை நிர்வகிக்கும் போது, பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பு மூலம் குளுகோர், ஐடியல் ரெசிடென்சி மற்றும் ஐடியல் வெனிஸ் ஆகிய இரண்டு மலேசிய பிரிமா கார்ப்பரேஷன் (PRIMA) கீழ் இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
“செபராங் பிறையில், பிரிமா பாவ் பெர்மாய் ரெசிடென்சி திட்டம் 2021 செப்டம்பர்,14 அன்று நிறைவடைந்தது. அங்கு 1,017 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. அதே நேரத்தில், வட செபராங் பிறையில் PPAM Konifer திட்டம் தொடங்கப்பட்டது.