பினாங்கில் மூன்று தலைமுறைகளாக கரி அடுப்பில் பாரம்பரிய சுவையுடன் இனிப்பான அப்பம்

Admin

பினாங்கில் மூன்று தலைமுறைகளாக க

தோசை, இட்லி,பூரி என இந்தியர்களின் புகழ்ப்பெற்ற உணவு வரிசையில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த திரு இரவீந்திரன் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக கடந்த 39 ஆண்டுகளுக்கு மேலாக ‘சாய்ராம் இனிப்பு அப்பம்’ என்ற பெயரில் ஓர் அங்காடிக் கடையை நடத்தி வருகின்றனர். இரவீந்திரன் – காஞ்சனா தம்பதியரின் கைவண்ணத்தில் மலரும் இனிப்பு அப்பம் பினாங்கு கூச்சிங் லேன் மற்றும் புலாவ் தீக்கூஸ் இரவுச் சந்தை ஆகிய இடங்களில் மிகவும் பிரபலமாகும்.

“இந்த இனிப்பு அப்பக் கடையை முதலில் எனது அப்பாவான திரு.சுப்ரமணியம் கடந்த 1974 இல் மருத்துவமனை சமையல்காரர் பணியில் இருந்து ஓய்வு பெற்றபோது, கோட்லீப் சாலையில் உள்ள ஓர் உணவகத்தில் மென்மையான, இனிப்பான, பஞ்சுபோன்ற அப்பம் விற்கும் ஒரு சிறிய கடையைத் தொடங்கினார்.

 

“இன்று, எனது தந்தையின் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் மென்மையான, இனிப்பான, பஞ்சுபோன்ற அப்பம் விற்கும் தொழிலை எனது மனைவி காஞ்சனா தேவியுடன் தொடங்கினேன்.

இரவீந்திரனின் கடை உள்ளூர் மக்கள் குறிப்பாக சீனர்கள், இந்திர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டதாகும்; புலாவ் தீக்கூசில் உள்ள லோரோங் குச்சிங்கில் உள்ள அவரது கடையில் இந்த அப்பத்தை வாங்க நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் நிற்பதை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம்.

“நாங்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் விற்பனைச் செய்து வருகிறோம், இப்போது என் மகனும் மூன்றாவது தலைமுறையாக இரவில் புலாவ் தீக்கூஸ் சந்தையில் இந்த இனிப்பு அப்பத்தை விற்கின்றார்,” என்று அவர் கூறினார்.

நியூ கேத்தே காபி கடைக்கு வெளியே அமைந்துள்ள சாய் ராம் இனிப்பு அப்பக் கடை திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 வரை திறந்திருக்கும்.

இரவீந்திரனும் அவரது மனைவி காஞ்சனா தேவியும், கரி அடுப்பில் மினி நான்-ஸ்டிக் சட்டியில் அப்பத்தை சமைப்பார்கள்.

இத்தம்பதியர் எறும்பு போல் விறுவிறுப்புடன் வேலை செய்கின்றனர். திரு இரவீந்திரன் முன்னதாகவே அரைத்தை வைத்த மாவுடன் அப்பம் சுடுவதற்கான சிறிது நேரத்திற்கு முன்பு மாவை முட்டையுடன் கலந்து தயார் செய்கிறார். அதனை அவரது மனைவி கரி அடுப்பில் சுவையான அப்பத்தைச் சுடுகிறார்.
அதேவேளையில், இரவீந்திரன் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர்களை எடுத்து அப்பத்தை பரிமாறுவார்.

மாவு, தேங்காய் பால், சர்க்கரை மற்றும் முட்டையின் கலவையில் தயாரிக்கப்படும் இந்த மாவு தொடர்ச்சியாக கரிக்கட்டையில் எரிக்கொண்டிருக்கும் ஐந்து சட்டியில் ஊற்றப்படுகின்றது. பின்னர்,
அச்சட்டியை கையால் சுழற்றி ஒரு மெல்லிய அடுக்கை உருவாக்கப்படுகிறது. சட்டிகள் சில நிமிடங்களுக்கு மூடப்பட்டிருக்கும், பின்னர் அப்பம் புரட்டப்படும். இது மிருதுவான விளிம்புகளுடன் நல்ல பழுப்பு நிறமாக இருக்கும்போது தயாரானதாக கருதப்படுகிறது.
இறுதியில் மென்மையான, பஞ்சுபோன்ற அப்பம் தயாரித்து பரிமாறப்படுகிறது.

“நாங்கள் எரிவாயுவைப் பயன்படுத்துவதில்லை, பல அப்பக் கடை விற்பனையாளர்கள் எரிவாயுவுக்கு மாறியுள்ளனர். ஆனால் நாங்கள் கரிக்கட்டையைப் பயன்படுத்த விரும்புகிறோம். இதனால் எங்கள் உணவின் தரம் மற்றும் சுவை மாறாமல் இத்தனை ஆண்டுகள் நிலைத்திருகின்றது,” என்று அவர் கூறினார்.

இந்தக் கடை பாரம்பரியப் பாணியிலான அப்பங்களைக் கூடுதல் சுவைகள் அல்லது நவீன நிரப்புதல்கள் இல்லாமல் விற்கப்படுகிறது.

“எங்கள் மகன், தேவன் சில வித்தியாசமான நிரப்புதல்களுடன் முயற்சித்தார். ஆனால் எங்கள் வாடிக்கையாளர்கள் பாரம்பரிய எளிய அப்பங்களை விரும்புவதை அவர் கண்டறிந்தார். எனவே நாங்கள் எங்கள் பாரம்பரிய செய்முறையைத் தொடர்கிறோம்,” என்று இரவீந்திரன் கூறினார்.

அவர்களின் அப்பங்களுக்கு அவர்கள் வழங்கும் ஒரே கூடுதல் “நிரப்புதல்” மேலே ஒரு முட்டையைச் சேர்ப்பதுதான்.  அனைத்து அப்பங்களும் வாழை இலைகளில் பரிமாறப்படுகின்றன.

பினாங்கில் புகழ்ப்பெற்ற இந்த இனிப்பு அப்பம் அண்மையில் நம் நாட்டு மாமன்னர் பினாங்கிற்கு வருகையளித்தப்போது அவருக்கும் இது பரிமாறப்பட்டது பாராட்டக்குரியதாகும்.