ஜோர்ச்டவுன்- மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பினாங்கில் விரைவு தொடர்வண்டி சேவை (LRT) அமைப்பதற்கான மேம்பாட்டு நிதியை ஏற்றுக்கொள்ளுமாறு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது விரைவு தொடர்வண்டி சேவை மற்றும் பினாங்கு தீவு இணைப்பு நெடுஞ்சாலை(PIL) அமைப்பதற்குக் கடல் விரிவாக்கம் மூலம் கிடைக்கப்பெறும் நிதியின் வாயிலாக மேம்படுத்தப்படும் என வாய்மொழி
கேள்விபதில் பிரிவில் இவ்வாறு தெரிவித்தார்.
கடல் விரிவாக்கம் மூலம் கிடைக்கப்பெறும் நிதியைக் கொண்டு எதிர்காலத்தில் இத்திட்டத்தின் பராமரிப்பு மற்றும் செயலாக்கப் பணி மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும்.
தெற்கு தீவுப்பகுதியில் கடல் விரிவாக்கம் திட்டம் அமல்படுத்தவில்லை என்றால் மாநில அரசு கூட்டரசு அரசாங்கத்திடம் இருந்து நிதி பெற வேண்டும்.
மேலும், கடல் விரிவாக்கம் மூலம் நில பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், நிபுணத்துவமிக்க பணியாட்கள் வெளியேற்றம் ஆகிய பிரச்சனைகள் களையக்கூடும் என தெளிவுப்படுத்தினார்.
மாச்சாங் புபு சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் எழுப்பிய கேள்வுக்குப் பதிலளிக்கும் வகையில் இவ்வாறு கூறினார்.
பினாங்கில் போக்குவரத்து செயல்படுத்த“Penang Own State Bank” அமைக்கும்படி தெலுக் பஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனைத் தெரிவித்தார்.