அண்மையில் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் இருக்க இந்தியா தடை விதித்த பிறகு, அந்த கொள்கையில் இறக்குமதி செய்யும் நாடாக மலேசியாவிற்கு மறைமுகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கையாள்வதில், மலேசியாவும் வெங்காய நடவுத் திட்டங்கள் மூலம் மூலப்பொருளின் பாதுகாப்பைப் பராமரிக்க நடவடிக்கை எடுத்ததுள்ளது. மலேசிய ஆராய்ச்சி மற்றும் வேளாண்மை நிறுவனம் (MARDI), பினாங்கு மாநில வேளாண்மைத் துறை மற்றும் தாசெக் கெலுகோர் அர குடாவிற்கு அருகிலுள்ள விட்ராக்ஸ் அக்ரிடெக்கின் (Vitrox Agritech) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் வெங்காய நடவுத் திட்டத்தை 0.4 ஹெக்டேர் நிலத்தில் மேற்கொண்டது. இதன் வாயிலாக 1.3 டன் வெங்காயத்தை வெற்றிகரமாக பினாங்கும் அண்மையில் அறுவடை செய்தது.
விட்ராக்ஸ் அக்ரிடெக்கின் வெங்காயப் பண்ணையான அர குடாவிற்கு புத்தாக்க விவசாயம் & உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு, ஃபாஹ்மி சய்னோல் திட்டத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஃபஹ்மியின் கூற்றுப்படி, இந்த மாநிலத்தில் வெங்காய நடவுத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகும், இது வெங்காய விநியோகத்தின் பாதுகாப்பு சிக்கலைச் சமாளிக்கும் முயற்சியாகும். “இந்த திட்டம் வெற்றிகரமானதாக பார்க்கப்படுகிறது, ஆனால் பல விஷயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். அதாவது, இது இந்திய வெங்காயத்துடன் ஒப்பிடும்போது அளவைப் பார்த்தால் கொஞ்சம் சிறியது.
“இருப்பினும், இந்த வெங்காயத்தின் சுவை ஒரே மாதிரியாக இருக்கிறது, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் சுவாரஸ்யமான வாசனையுடன் சுவையாக இருக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.
“MARDI மேலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன், குறிப்பாக இந்த பினாங்கு வெங்காயத்தின் அளவை அதிகரிக்கவும் ஸ்மார்ட் விவசாயத்தை மேம்படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் முத்து செய்தி நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலின் போது கூறினார்.
இத்திட்டத்தின் நேர்மறையான வளர்ச்சியைப் பார்க்கும்போது, பினாங்கு வெங்காயத்தின் திறனை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முடியும் என்றும் ஃபஹ்மி நம்பிக்கை தெரிவித்தார். “எனினும், இந்த வெங்காயம் தாவரத்தை முக்கிய பயிராக பராமரிப்பது சவாலாக உள்ளது. வெங்காயம் அளவு வளராமல் தடுக்கும் காரணிகளில் ஒன்று, இங்கு வானிலை போதுமான அளவு வெப்பமாக இல்லை. வெங்காயத்திற்கு வெப்பமான வானிலை தேவை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இங்கே வெப்பமான வானிலை உள்ளது, ஆனால் கனமழை ஏற்பட்டால் வெங்காயம் பயிர் பாதிக்கக்கூடும். அதனால் எங்கள் வெங்காயத்தை பிளாஸ்டிக் கூரையின் கீழ் நட்டுள்ளோம்.
“இந்த வழியில் வெங்காய செடிகள் கனமழையால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும், ஆனால் அதே நேரத்தில் அது சூரிய ஒளியைக் குறைக்கிறது.
“எதிர்காலத்தில் பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்வதற்காக நாம் கடக்க வேண்டிய சவால்களில் இதுவும் ஒன்றாகும்” என்று பந்தாய் ஜெராஜாக் மாநில சட்டமன்ற உறுப்பினரான அவர் தெரிவித்தார்.
ஃபாஹ்மியின் கூற்றுப்படி, வெங்காயம் பயிரிட அதிக பொருட்செலவு தேவைப்படுகின்றது.
“ஆகவே, ஸ்மார்ட் விவசாயத்தை மேம்படுத்த நான் வலியுறுத்துகிறேன். இப்போது வெங்காயத்தின் விலை சற்று அதிகமாக உள்ளது, ஏனெனில் அதற்கு நிறைய மனிதவளம் தேவைப்படுகிறது.
“விதைத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல் மற்றும் உலர்த்துதல் போன்ற வேலைகளில் இருந்து ஆள் தேவை, அறுவடை செய்யும் பணியில் இயந்திரங்களைப் பயன்படுத்தினால், செலவைக் குறைக்கலாம்.
“அறுவடைக்குப் பிறகு, இந்த வெங்காயத்தை சுமார் இரண்டு வாரங்களுக்கு உலர்த்த வேண்டும், இதனால் அவை விற்பனைக்கு முன் முற்றிலும் உலர்ந்திருக்கும்,” என்று அவர் விளக்கினார்.
குறுகிய காலத்தில், பினாங்கு வெங்காயம் உள்ளூர் மக்களிடையே மட்டுமே விற்கப்பட்டு தொழிற்சாலைகளில் விற்பனை செய்யப்படும்.
இந்த வெற்றியைப் பார்த்து, வெங்காயப் பயிர்களை விரிவுபடுத்துவதற்கு MARDI, விவசாயத் துறை மற்றும் பிற ஆர்வமுள்ள தரப்பினருடன் ஒத்துழைக்க அதிகமான விவசாயிகள் முன்வருவார்கள் என்று ஃபாஹ்மி நம்பிக்கை தெரிவித்தார்.