மலாக்கா நீரிணை வாயிலாக பினாங்கு மாநில நிலப்பகுதிகளுக்கும் மழை மேககங்கள் வருவதால் தொடர்ந்து பினாங்கில் மழைப் பொழியும் என மலேசிய வானிலை துறை அறிவித்தது. கடந்த சில தினங்களாக பினாங்கு தீவு மற்றும் பெருநிலப்பகுதிகளிலும் கனத்த மழை பெய்வதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பினாங்கு அரசு தலைவர்கள் வெள்ளம் ஏற்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டினர். ஆட்சிக்குழு உறுப்பினரும் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஜெக்டிப் சிங் டியோ தனது டத்தோ கெராமாட் தொகுதியில் வெள்ளம் ஏற்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு மாநகர் கழக ஊழியர்களுடன் இணைந்து உதவி செய்தார். பினாங்கு மாநர் கழகம் மற்றும் டிங்கி தடுப்பு & தூய்மை பணிக்குழுவினர் இணைந்து துப்புரவுப் பணியில் ஈடுப்பட்டனர்.