- ஜார்ச்டவுன் – பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP), வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கும் 2.5 நாட்கள் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை (SWSI) திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடன் விளக்க அமர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமங்களின் அனைத்து மூலைகளிலும் அறிவிப்புகள் வெளியிடப்படும், அதோடு மக்களின் தயாரிப்பு செயல்முறை போதுமான அளவில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யப்படும் என்று ஜேன் தங்கும் விடுதியில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ Ir.பத்மநாதன் இவ்வாறு கூறினார்.
பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு தொடங்கி 23 தொடர்புடைய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான இறுதிப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளுப்படும். இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஏப்ரல்,28 ஆம் தேதி (காலை 10.00 மணி) முழுமையாக மீட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மாநில முதலமைச்சரும், நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான மேதகு சாவ் கொன் இயோவ்; முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்; மாநில அரசு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
பத்மநாதனின் கூற்றுப்படி, பினாங்கில் நீர் நெருக்கடியின் அபாயத்திற்கு எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதற்காகவும், மாநிலத்தின் பொருளாதார மையத்தையும் எதிர்கால மக்கள்தொகை வளர்ச்சியையும் ஆதரிப்பதற்காகவும், SWSI ஐ செயல்படுத்துவதன் மூலம் PBAPP முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது.
“ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படும் 23 திட்டங்களில், மிக நீண்ட நேரம் 12 மணிநேரம் ஆகும், இது சுங்கை பிறையைக் கடக்கும் குழாயின் இறுதி இணைப்புப் பணியைக் குறிக்கிறது,” என்று அவர் விளக்கமளித்தார். இந்த முறை SWSI-ஐ செயல்படுத்துவதற்கான மொத்த முதலீடு ஏறக்குறைய ரிம25 மில்லியன் என்று தெரிவித்தார்.
முன்னதாக 2024,ஜனவரி தொடக்கத்தில் PBAPP, சுங்கை டுவா LRA இல் முதல் 1,200 மில்லிமீட்டர் (மிமீ) வால்வை மாற்றுவதற்கான இறுதிப் பணிகளை முடிக்க SWSI திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது, அத்துடன் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.