பத்து காவான் – நீரிழிவு நோயாளிகளுக்கான தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான DEXCOM, பினாங்கில் தனது முதல் உற்பத்தி நிறுவனத்தை வெற்றிகரமாகத் திறந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், புதிய உற்பத்தி நிறுவனத்தின் தொடக்கம், பினாங்கின் வளர்ந்து வரும் தொழில்துறை மேம்பாட்டுக்கு ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
“இன்றைய தொடக்க விழா Dexcom நிறுவனத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. இந்நிறுவனம் அமெரிக்கா நாட்டுக்கு வெளியே அதன் முதல் உற்பத்தி நிறுவனத்தை பினாங்கில் அமைத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
“இந்நிறுவனம் ரிம2.83 பில்லியன் முதலீட்டில், மாநிலத்திற்கு 3,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளைக் கொண்டுவரும். இது உலகளவில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உதவும்.
“இந்தப் புதிய வசதியின் மேம்பாடு,
குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) அமைப்புகளின் மூலம் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்துவதற்கான Dexcom இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
“பினாங்கு மாநிலம் மேம்பட்ட தொழில்நுட்பத் தொழில்களுக்கான உலகளாவிய மையமாக அதன் நற்பெயரை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது உயர்தர உற்பத்தி மற்றும் புத்தாக்கத்திற்கான இடமாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது,” என்று சாவ் கூறினார்.
Dexcom Inc. நிறுவனத்தின் தலைமையகம் 1999 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் சான் டியாகோவில் நிறுவப்பட்டது.
இதற்கிடையில், 50 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட Dexcom நிறுவனம் பினாங்கில் நிறுவப்பட்டு, தென்கிழக்கு ஆசியாவின் தொழில்நுட்ப மருத்துவம் மையமாக உருமாறுவதற்கான சரியான பாதையில் பயணிக்கிறது என சாவ் கூறினார்.
Dexcom Inc. கலிபோர்னியாவின் சான் டியாகோவில் தலைமையகம் உள்ளது மற்றும் 1999 இல் நிறுவப்பட்டது.
இதற்கிடையில், 50 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறையின் சிறப்பைக் கட்டியெழுப்ப பினாங்கு தென்கிழக்கு ஆசியாவின் தொழில்நுட்ப மருத்துவ மையமாக மாறுவதற்கான சரியான பாதையில் செல்கிறது என்பதையும் சாவ் பகிர்ந்து கொண்டார்.
“தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் அதிக அளவிலான தொழில்நுட்ப மருத்துவம் சார்ந்த நிறுவனங்களைக் கொண்டு பினாங்கு
தனித்துவம் கொள்கிறது.
“கடந்த 5 ஆண்டுகளாக (2019 – 2023), பினாங்கு அறிவியல் மற்றும் அளவீட்டுக் கருவித் துறையில் மொத்தம் ரிம5.8 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளைப் பெற்றுள்ளது.
“இந்தத் துறையில் நாட்டின் மொத்த முதலீட்டில் 45 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இதில் 33 திட்டங்கள் மற்றும் 4,630 வேலை வாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று சாவ் கூறினார்.
மலேசிய புள்ளியியல் துறையின்படி, செப்டம்பர் மாதத்தில் மொத்த வர்த்தகத்தில் 37.5 சதவீதம் அல்லது ரிம46.5 பில்லியனுடன் பினாங்கு நாட்டின் முதல் ஏற்றுமதி மாநிலமாக இருந்தது.
“கடந்த ஐந்து ஆண்டுகளில், பினாங்கு, மருத்துவ சாதனங்கள் உட்பட தொழில்முறை, அறிவியல் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மருத்துவக் கருவிகளில் ரிம149 பில்லியனுக்கு ஏற்றுமதியை பதிவு செய்துள்ளது. இது அந்த காலக்கட்டத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சராசரியாக 67 சதவீதத்தைக் குறிக்கிறது.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA) மற்றும் InvestPenang ஆகியவை பினாங்கின் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக பினாங்கை உருவாக்கும் முன்னணி முயற்சிகளுக்கும் சாவ் நன்றித் தெரிவித்தார்.