பினாங்கு அணி பரதன் கோப்பைப் பெற இலக்கு

img 20241202 wa0136

ஜார்ச்டவுன் – 2024 பரதன் கோப்பைக்கான வேட்டையில், பினாங்கு அணி அதன் தொடக்கப் போட்டியில் களம் இறங்குகிறது. தேசிய அளவிலான இந்தப் போட்டியில் மதிப்புமிக்க சாம்பியன் கோப்பை மற்றும் ரிம10,000 ரொக்கப் பரிசை தட்டிச் செல்ல அனைத்து குழுவினரும் போட்டியிடுகின்றனர்.

img 20241202 wa0142

பினாங்கு மாநிலத்திற்கான வெற்றியை நோக்கி அதன் முதல் போட்டி வருகின்ற டிசம்பர் 6, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஐகானிக் சிட்டி அரங்கில் தொடங்குகிறது. இப்போட்டியில் பெர்லிஸ் குழுவினருடன் விளையாடி வெற்றிப் பெற இலக்கு கொண்டுள்ளனர். முற்றிலும் புதிய 23 வயதுக்குட்பட்ட அணியை களமிறக்கும் பினாங்கு, தங்கள் சொந்த மைதானத்தில் வெற்றி வாகை சூடுவர் என வாக்குறுதி அளிக்கின்றனர்.
img 20241202 wa0134
140 போட்டியாளர்கள் பட்டியலில் இந்தப் போட்டிக்கான கடுமையான தேர்வு செயல்முறையில், 25 வீரர்கள் மட்டுமே தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். இது பயிற்சியாளர்களின் உன்னதமான முயற்சியைப் பிரதிபலிக்கிறது.

கடந்த ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பினாங்கு மாநிலம் மீண்டும் 15 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக கைப்பற்றிய பரதன் கோப்பையை மீண்டும் பெறுவதற்கு இலக்கு கொண்டுள்ளது.

தலைமைப் பயிற்சியாளரான எஸ்.தினகரன் டிசம்பர் 1ஆம் தேதி பாயா தெருபோங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அணியின் தயார்நிலையில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மலேசிய இந்தியர் காற்பந்து சங்கம் (MIFA) ஆண்டுதோறும் நடத்தும் பரதன் கோப்பை, ஓர் இடைவெளிக்குப் பிறகு மீண்டு மலந்துள்ளது. இந்த ஆண்டுக்கானப் போட்டியில் 12 அணிகள் களம் இறங்கியுள்ளன. இப்போட்டி வருகின்ற 2025, ஜனவரி இறுதி வரை நடைபெறும்.
அண்மையில், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் மற்றும் பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜே. தினகரன் ஆகியோரால் அதிகாரப்பூர்வ தொடக்க விழாக் கண்டது. இந்த விழாவில், பினாங்கு அணி விளையாட்டாளர்களுக்கு ஜெர்சி வழங்கப்பட்டன.

“இந்தப் போட்டி இந்தியச் சமூகம் மற்றும் ஆதரவாளர்களிடம் அதிக ஆதரவுப் பெறுவதற்குத் தகுதியானது. பினாங்கு விளையாட்டு வீர்ர்கள் போட்டியை கவனத்துடனும் ஆர்வத்துடனும் அணுகுமாறு,” சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஊக்குவித்தார்.
மலேசிய இந்தியர் காற்பந்து வீரர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் பரதன் கோப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. அதேவேளையில், அணி மேலாளர் ஹெய்ட்ரியன் டாஸ் அணியில் உள்ள நல்லிணக்கத்தைப் பாராட்டியதோடு, இதில் மூன்று இந்தியர் அல்லாத வீரர்கள் உள்ளனர்,” என தினகரன் எடுத்துரைத்தார்.

“வீரர்களிடையே வேறுபாடுகள் இருந்தபோதிலும் குழுவில் ஒற்றுமையைப் பின்பற்றுவது மிக அவசியமாகும். இந்த முக்கிய போட்டியை நாங்கள் எதிர்கொள்ளும் போது இது முக்கியமான திறவுகோளாகத் திகழ்கிறது,” என்று ஹெய்ட்ரியன் கூறினார்.

மிட்ஃபீல்டர்களான பி. ஷர்வின், பன்முகத் திறமைக்கு பெயர் பெற்றவர் மற்றும் சி. மகேஸ் மற்றொரு திறமையாளர் ஆகியோர் பார்க்க வேண்டிய முக்கிய வீரர்களில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.யோகேஷ், சாமுவல், சிவாஜி, ஜி.கதிர்வேல், கலை, சுரேஷ், கிருஷ்ணா, மற்றும் வி.வேணுகோபால் உள்ளிட்ட தனது அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்களின் பங்களிப்பையும், தினகரன் பாராட்டினார்.

ஒரு புதிய வரிசை, புதுப்பிக்கப்பட்ட மற்றும் அசைக்க முடியாத உறுதியுடன், பினாங்கு அணி 2024 பரதன் கோப்பையில் முத்திரை பதிக்க தயாராக உள்ளது.

ஜெர்சி வெளியீட்டு விழாவின் போது பினாங்கு இந்தியர் காற்பந்த சங்கத் தலைவர் பிரேம்குமார், நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.