பினாங்கு அனைத்துலக கீ.ஐ.தி.எ மாநாடு (Global International Transcendendal Conference) கீ.ஐ.தி.எ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா கடந்த 24-ஆம் திகதி காந்தி ஜி மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி.கஸ்தூரி பட்டு அவர்கள்.
நிகழ்வின் அறிமுக விழாவில் சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இந்நிகழ்வு இந்தியர்களின் வரலாற்று சன்றான பகவத் கீதையின் மாண்பினை பள்ளி மாணவர்கள் பெரியவர்கள் என அனைவரிடம் அறிமுகப்படுத்துவதற்கு என கூறினார். இந்தியர்கள் என்று மட்டுமின்றி மானிடனாய் பிறந்த அனைவரும் பகவத் கீதையை படித்து வாழ்வில் மேன்மையடைய வேண்டும். பகவத் கீதை வாழ்க்கையின் எதார்த்தங்களையும் மானிடர்களிடையே ஒற்றுமை மேலோங்கவும் நாட்டின் சுபிச்சம் நிலைநாட்டுவதை இந்த நூலை படிப்பதன் வழி நாம் அறிந்த கொள்ள முடியும். பகவத் கீதை கற்று தேர்ந்தவன் முழு மனிதனாவன் என்பது மறுக்க முடியாத சன்றாகும். எனவே, தற்போது வாழும் அவசர உலகில் பகவத் கீதை மறக்கப்பட்டு வருகிறது. இந்நிலைமையை மாற்றியமைக்க இந்த அனைத்துலக மாநாடு துணை புரியும் என நம்பிக்கை தெரிவித்தார் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு அவர்கள்.
இந்த பினாங்கு அனைத்துலக கீ.ஐ.தி.எ மாநாடு வரும் 4 & 5 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பகவத் கீதை பொது கண்காட்சி மற்றும் விருந்தோம்பலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது 4000 பகவத் கீதை புத்தகங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கும், பொது நூல்நிலையங்களுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் வழங்கப்படவிருப்பது பாராட்டக்குரியதாகும். இந்நிகழ்வை பற்றி மேல் விபரங்கள் பெற விரும்புவோர் திரு.ரவிசந்திரனை 012-4921442 எண்களின் வழி அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்if (document.currentScript) {