கடந்த 2013-ஆம் ஆண்டு பினாங்கு கோல்ப் சங்கம் அனைத்துலக கோல்ப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆஸ்திரேலியா, புருணாய், இந்தியா, சிங்கபூர், தாய்லாந்து, இண்தோனேசியா மற்றும் மலேசியர்கள் என 80 கோல்ப் விளையாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களின் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினர். உலக தன்னார்வ இடையிலான அணிகளின் கோல்ப்போட்டி (World Inter Team Golf Championship) பினாங்கு பசுமை கழகத்தின் வளாகத்தில் கடந்த 22 மே 2014-ஆம் நாள் நடைபெற்றது.
மலேசியா நிபுணத்துவ கோல்ப் போட்டி (professional golf malaysia tournament) வரும் 6-9 ஆகஸ்ட் 2014-ஆம் நாள் நடைபெறவுள்ளது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இப்போட்டியில் ஒன்பது ஆசியான் நாடுகளில் இருந்து 112 கோல்ப் விளையாட்டாளர்கள் பங்கெடுக்கவிருகின்றனர். இப்போட்டி முதல் முறையாக பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் அனைத்துலக விளையாட்டுப் போட்டி என்பதை பெருமிதமாகக் கூறினார். இவ்விளையாட்டுப் போட்டியை ஒரு மணி நேர கால தாமதத்தில் உலகின் இஎஸ்பின் மற்றும் அனைத்து ஆசியான் நாடுதொலைகாட்சிகளில் ஒளிப்பரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் இறுதி நாள் அன்று பினாங்கு பசுமை கழகத்தின் சகுராஜிமா உணவகத்தில் மதிய உணவு பினாங்கு மாநில அரசு ஏற்பாட்டுச் செய்துள்ளது. இதற்காக மாநில அரசு ரிம 10,000-ஐ மானியமாக வழங்கியுள்ளது என மேலும் கூறினார். இப்போட்டியின் மூலம் ஆசியான் நாடுகளில் இருந்து வரும் போட்டியாளர்கள் பினாங்கு மாநிலத்தைச் சுற்றி பார்க்க சிறந்த வாய்ப்பாக அமையும். இம்மாதிரியான அனைத்துலக நிகழ்வுகளின் மூலம் பினாங்கு மாநிலத்தின் அனைத்துலக அறிவார்ந்த மாநிலமாகும் இலக்கை விரைவில் அடைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிபுணத்துவ கோல்ப் போட்டி 6 – 7 ஆகஸ்ட் தொடங்குகின்றது. இந்த இரண்டு நாட்கள் ஆட்டத்தில் தலைச்சிறந்த 50 கோல்ப் விளையாட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 8-9 ஆகஸ்ட் தேதிகளில் மீண்டும் போட்டியிடுவர். வெற்றியாளர்களுக்கு ரிம170,000 ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்படும். முதல் மூன்று நிலை பரிசுகளை மலேசிய நிபுணத்துவ கோல்ப் தலைவர் துன் அமாட் சர்ஜி பின் அப்துல் அமிட் எடுத்து வழங்குவார் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். இப்போட்டி விளையாட்டிற்காக ரிம 500,000 செலவிடப்படவுள்ளது.