பினாங்கு வாழ் இந்திய மாணவர்கள் கல்வி துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி உபகாரச் சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மே மாதம் 18-ஆம் திகதி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கொம்தாரில் அமைந்துள்ள இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு அதிகமான இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தாலும் 256 மாணவர்கள் மட்டுமே இந்த உபகாரச் சம்பளம் பெற தகுதிப்பெற்றனர் என்றால் மிகையாகாது. இந்து அறப்பணி வாரிய நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரிம487,848.20-ஐ வழங்கப்பட்டது.
இவ்வுதவித் தொகை டிப்ளோமா(foundation), சான்றிதழ், மற்றும் இளங்கலை பட்டம் என்ற கல்வித் தகுதி அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அதிகமான மாணவர்கள் தொழிற்கல்வி சார்ந்த துறையில் மேற்கல்வி பயின்று அனைத்து துறைகளிலும் பீடுநடைப் போட வேண்டும் என்ற நோக்கத்தில் தொழிற்கல்வி கல்லூரியில் பயிலும் பல மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. உபகாரச் சம்பளம் பெறும் மாணவர்கள் கல்வியில் தங்களின் முழு கவனத்தைச் செலுத்தி எதிர்காலத்தில் சிறந்த தொழிற்கல்வி நிபுணர்களாக உருவாக வேண்டும் என்றார் இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி. இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகக் கொடுக்கப்படும் உபகாரச் சம்பளம் ஒருபோதும் மீட்டுக் கொள்ளப்படமாட்டாது என்றும் முற்றிலும் இலவசம் என்றும் சூளுரைத்தார்.
இந்து அறப்பணி வாரியத்தின் கீழ்ச்செயல்படும் நிலம், கடை, வீடு ஆகிய சொத்துகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தை இந்திய மாணவர்களின் கல்வி சுமையைக் குறைக்க வழங்குகின்றனர் என்பது பெருமைக்குரியது. கடந்த 2008 முதல் 2015-ஆம் ஆண்டு வரை இந்து அறப்பணி வாரியம் ரிம2,008 511.20 வழங்கியுள்ளது. 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரை வழங்கிய உபகாரச் சம்பளம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழ் வருமாறு:
விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் தங்களின் விண்ணப்ப பாரங்களில் கோரப்படும் முழு விபரங்களையும் அவசியம் பூர்த்திச் செய்வதாடு, குறிப்பிட்ட சில ஆவணங்களுக்கானப் பிரதிகளையும் உடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார் பேராசிரியர். அடுத்த வருடம் தொடங்கி விரைவாக விண்ணப்பம் அனுப்பும் மாணவர்களுக்கு சீக்கிரமாக உபகாரச் சம்பளம் வழங்க அறப்பணி வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏனென்றால் அனைத்து விண்ணப்பங்களையும் உன்றினைத்து, ஒரே சமயம் உபகாரச் சமபளம் வழங்குவதால் பணச்சிக்கல் ஏற்படுவதாகக் கூறினார்.
எனவே, உரிய நேரத்தில் வழங்கப்படும் பணம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் தோல் கொடுக்கும் என்றார்.
இந்நிகழ்வில், இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் திரு இராமசந்திரன், இந்து அறவாரிய உறுப்பினர் திரு சண்முகநாதன், டத்தோ எஸ் குவனராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);