பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பினாங்கு மாநில ஆலயங்களைக் கைப்பற்றுவதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்தார் அதன் தலைமை நிர்வாக இயக்குநர் திரு இராமசந்திரன். இந்து அறவாரியம் முறையான ஆலய நிர்வாக அனுமதியின்றி எந்த ஆலயத்தையும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை எனத் தெளிவுப்படுத்தினார். மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தேசியத் தலைவர் திரு சுப்பிரமணியம் இந்து அறவாரியம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆலயத்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமியிடம் சட்ட ரீதியாக விளக்கம் கேட்கப்போவதாக பினாங்கு மஇகா தீபாவளி பொது உபசரிப்பில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மேலும் அறவாரியத்தின் அதிகாரத்தைப் பற்றி சட்ட ஆசோசகர் துறையிடம் (அட்டர்னி ஜெனரல்) முழுமையான விளக்கம் பெற முற்படுவதாக சுகாதார அமைச்சருமாகிய திரு சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்து அறப்பணி வாரியம் மீது சமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையற்றது என நிருபிக்க பிரமதர் துறை அமைச்சர் மா சியூ கியோங்விடம் அறிக்கை மற்றும் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படும் என்றார் திரு இராமசந்திரன். மேலும், மஇகா தேசியத் தலைவர் திரு சுப்பிரமணியம் அறிக்கை விடுவதற்கு முன் தனது கருத்துகளின் உண்மை சாரத்தை நன்கு ஆராய வேண்டும் எனத் தெரிவித்தார். பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பினாங்கு வாழ் இந்து மக்களின் நலன் மற்றும் சொத்துடைமைகளைப் பாதுகாப்பது மட்டுமே அதன் தலையாய கடமையாகும்.
பிறை வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் பரிபாலன தேவஸ்தானத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட சர்ச்சை/உட்பூசல் காரணமாக கடந்த 24 அக்டோபர் 2015-ஆம் நாள் அன்று பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நிர்வாக உரிமத்தை கைப்பற்றியது. இந்த ஆலயத்தின் பதிவு ரத்தாகி இருப்பதாலும் ஆலய நிர்வாகத்தில் மோசடி ஏற்பட்டிருப்பதாலும் பொதுமக்கள் கொடுத்த புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் திரு இராமசந்திரன். இதன் மூலம் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லை என்பது உறுதியாகிறது.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);