கடந்த 6 ஜனவரி 2016, பினாங்கு மாநகர் கழகம் (MBPP) மற்றும் செபெராங் பிறை நகராண்மைக் கழகம் (MPSP) புதிய நகராண்மைக் கழக உறுப்பினர்கள் அறிவித்துள்ளது. பதவி உறுதிமொழி எடுக்கும் இரு உள்ளூர் கழகங்களின் புதிய உறுப்பினர்கள் சிறந்த சேவையாற்ற மனதார வாழ்த்துகிறேன். இவ்வாண்டு பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபெராங் பிறை நகராண்மைக் கழகத்திலும் 8% பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். (கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பினாங்கு மாநகர் கழகத்தில், பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 இருந்து 5-ஆக உயர்ந்துள்ளது மற்றும் செபெராங் பிறை நகராண்மைக் கழகத்தில் 1ல் இருந்து 3ஆக உயர்ந்துள்ளது. சதவீத அடிப்படையில் தற்சமயம் பினாங்கு மாநகர் கழகத்தில் 20% மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் 12%.பெண் பிரதிநிதிகள் உள்ளனர். நிலையான பாலின சமத்துவத்தால் பினாங்கு மாநிலம் சீரான நிர்வாகத்தை அடைய முடியும்.
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக தலைமையில் திட்டங்களும், முயற்சிகளும், “பாலினப் பொறுப்பு” , பட்ஜெட் மற்றும் பங்கேற்பு”(GRPB) திட்டங்ளும் அதே சமயம் பாலின புரிந்துணர்வுக்குச் சாதகமாக இருந்த மாநிலம் மற்றும் ஊராட்சி கழகம் , அரசியல் முடிவெடுப்பாளர்களுமே இந்த மாற்றத்திற்குக் காரணம் என நம்புகின்றேன் .
சர்வதேச ஆய்வின் மூலம் “CEDAW”-வில் குறிப்பிட்டுள்ள (ஐக்கிய நாடுகளுக்கான மாநாட்டில் பெண்களுக்கு எதிரான எல்லா வகையானப் பாகுப்பாட்டையும் ஒழித்தல்) அரசியலில் பெண்களின் பங்களிப்பு 30 முதல் 35 சதவீதம் இருந்தால் மட்டுமே அரசியல் நடைமுறையில் தெளிவான ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் கொண்டுவர முடியும்.
நாம் இதுவரை 30% மட்டுமே அடைந்துள்ளோம், மாற்றத்தை உருவாக்க பிரதிநிதித்துவம் அவசியம் தேவை. நாம் சரியான பாதையைத் தொடங்கியுள்ளோம் ஆண் பெண் சமத்துவம் , நல்ல சுற்றுச்சூழல் மற்றும் ஆதரவு இருந்தால் பெண்கள் அரசியலில் வலுவான தலைவர்களாக உருவாகலாம்.
கடந்த மற்றும் தற்போதைய இரு கழகங்களின் பெண் கவுன்சிலர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் குறைந்தது ஆறு பெண்கள் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் நடைப்பெற்ற பெண்களுக்கானத் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டவர்கள். அவர்களுள் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற கழகம் (JKKK) மற்றும் மகளிர் படையைச்( Briged Wanta) சேர்ந்த உறுப்பினர்களாவர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்க பிரதிநிதியாகிய நான், பெண்களுக்கு எல்லா வகையில் வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்கள் கிடைக்க பாலின சமத்துவம் அடைய மற்றும் முடிவெடுக்கும் பதவிகளுக்குப் பெண் பிரதிநிதிகள் அதிகரிக்க உறுதுணையாக இருப்பேன்.