ஜார்ச்டவுன் – இதுவரை 1,384 பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) தொழிலாளர்கள் தங்களது முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் பெற்றுள்ளனர்.
மாநில உள்ளூராட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, இரு மாநகர் கழக அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
“இந்த தடுப்பூசி திட்டத்தில் 993 தொழிலாளர்கள் எம்.பி.பி.பி-யும், மீதமுள்ள தொழிலாளர்கள் எம்.பி.எஸ்.பி-யும் சேர்ந்தவர்கள் ஆவர்.
“தற்போது அமலாக்கக் குழு மற்றும் பொது இடங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
“இது தேசிய கோவிட்-19 நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாநகர கழக ஊழியர்கள் தங்களது முதல் சுற்று தடுப்பூசிகளை முடித்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சிடைகிறேன்.
“அவர்கள் மே மாத தொடக்கத்தில் தங்கள் இரண்டாவது டொஸ் தடுப்பூசி பெறுவார்கள். இதனிடையே, எஞ்சி இருக்கும் இரண்டு மாநகர் கழக ஊழியர்களும் விரைவில் தடுப்பூசியைப் பெறுவர்.
“எனவே,கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தியை பெற அனைவரும் தடுப்பூசி திட்டத்திற்கு தங்களை பதிவு செய்து கொள்வது மிக அவசியம்.
“இத்தடுப்பூசி திட்டத்தில் குறைந்தது 70 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போடுவார்கள்,” என எதிர்ப்பார்ப்பதாக பாடாங் கோத்தாவில் இரு ஊராட்சி மன்ற 1000 முன்வரிசை பணியாளர்களுக்கும் மளிகை பொருட்களுக்கான பரிசுக்கூடையை எடுத்து வழங்கிய பின்னர் ஜெக்டிப் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
ஊடக ஊழியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற தனது வேண்டுகோளை ஜெக்டிப் மீண்டும் வலியுறுத்தினார்.
“தேசிய தடுப்பூசித் திட்டத்தில் எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி பணியாளர்களை போன்று ஊடக ஊழியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், ”என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் வலியுறுத்தினார்.
கடந்த செவ்வாய் கிழமையன்று பேராக் சாலையில் 53 வயதான ஒருவர் மீது மழை காரணமாக மரம் வேரோடு சாய்ந்த மரணம் ஏய்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஜெக்டிப் கூறினார்.
உண்மையில், அம்மரம் சான்றளிக்கப்பட்ட ‘ஆர்பரிஸ்ட்டால்’ நடப்பட்டுள்ளது.
“இறந்தவரின் குடும்பத்தார் உரிய நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.
“எங்கள் தரப்பில், அந்த விவகாரம் தொடர்பாக சிறந்த முறையில் கையாளப்படும்
எல்லா மரங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது,” என ஜெக்டிப் சூளுரைத்தார்.