நான்காவது தொழில்துறை புரட்சி 4.0 (ஐ.ஆர் 4.0) க்கு அடித்தளமாக தொழில்நுட்ப தரவு நிபுணத்துவம் திகழ்கிறது.
தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் சிறந்த சேவை மற்றும் உற்பத்தி மேம்படுத்த தொழில்நுட்ப தரவு நிபுணத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இருபத்து இரண்டு வயதான ஹனு ஸ்ரீ தனது மேல் படிப்பை முடித்த பின்னர் தரவு ஆய்வாளராகப் பணிப்புரிய இலக்காக கொண்டுள்ளதாக பகிர்ந்து கொண்டார்.
தற்போது கணினி அறிவியல் துறையில், தரவு பகுப்பாய்வு புலத்தில்
இளங்கலைப் பட்டம் கற்கும் ஹனு ஸ்ரீ, வணிகங்களை வலுப்படுத்துவதில் தொழில்நுட்ப தரவு நிபுணத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
“நான் பட்டம் பெற்ற பிறகு பினாங்குக்கு மீண்டும் சேவையாற்ற விரும்புகிறேன். தொழில்நுட்ப தரவு நிபுணத்துவத்தைக் கொண்டு திறன் மிக்க சூழலை உருவாக்கவும் முடியும். எதிர்காலத்தில் இத்துறையில் நிபுணத்துவம் மிக்க தரவு ஆய்வாளராக உருவாக்கம் காண இணக்கம் கொண்டுள்ளதாக, முத்துச்செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.
இவர் அடுத்த ஆண்டுக்குள் ஆசியா பசிபிக் தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு பல்கலைக்கழகத்தில் (APU) இளங்கலை பட்டம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020-ஆம் ஆண்டுக்கான பினாங்கு எதிர்கால அறக்கட்டளை உபகாரச் சம்பளத்திற்குத் தேர்வான 74 மாணவர்களில் ஹனு ஸ்ரீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்பியலில் இளங்கலை பட்டம் பயிலும் ஏ. ஜோசுவா, 20, தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர்
பினாங்கில் வானியல் மற்றும் வானியற்பியல் தொடர்பான ஆராய்ச்சி வசதியை நிறுவ எண்ணம் கொண்டுள்ளார்.
பி.எஃப்.எஃப் முத்தியாரா உபகாரச் சம்பளப் பெறுநரான ஜோசூவா இயற்பியல் பட்டம் பெற்றவர்கள் பொதுவாகவே, பட்டம் பெற்ற பின்பு இத்துறையில் குறைந்த வேலை வாய்ப்புகள் இருப்பதாக எண்ணம் கொள்கின்றனர்.
“நான் இத்துறையில் கல்வி கற்பதைப் பற்றி விமர்சித்த விமர்சகர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த
வானியல் மற்றும் வானியற்பியல் நிபுணராக உருவாக்கம் கண்டு காட்டுவேன்,” என்று அவர் கூறினார்.
ஜோசுவா துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைகழகத்தில் (யு.தி.ஏ.ஆர் சுங்கை லோங் கிளை) மே 2023-இல் பட்டம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், 2020 ஆண்டுக்கான பினாங்கு எதிர்கால அறக்கட்டளை (பி.எஃப்.எஃப்) உபகாரச் சம்பளத்திற்காக
ரிம3.4 மில்லியன் நிதி ஒதுக்கீடு
வழங்கப்படுவதாக அறிவித்தார்.
2015 ஆம் ஆண்டு (பி.எஃப்.எஃப்) முதல், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், கணக்கியல் மற்றும் நிதித்துறை ஆகிய துறைகளில் 585 சிறந்த மற்றும் தகுதியான மலேசிய இளைஞர்களுக்கு பி.எஃப்.எஃப் பயனளித்துள்ளது.