கடந்த 4 & 5 பிப்ரவரி 2017 அன்று நடைபெற்ற பினாங்கு காற்றழுத்த பலூன் விழாவில் 170,000 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் வருகையளித்து சிறப்பித்தனர். மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த விழா வெற்றி பெற அயராது உழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி நவில்ந்தார்.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மூன்று மடங்கு வருகையாளர்கள் அதிகரித்துள்ளனர். ஆரம்பத்தில் எதிர்க்கட்சி மற்றும் அரசு சாரா இயக்கங்களின் மூலம் பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டாலும் இறுதியில் கடுமையான சாலை நெரிசல் ஏற்படாமல் சிறப்பாக நடைபெற்றது. வருங்காலங்களிலும் இந்த காற்றழுத்த பலூன் விழா நடத்த எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார் முதல்வர் குவான் எங்.
நிகழ்வில் முதன்மை ஏற்பாட்டு குழுத் தலைவர் (AKA Balloon Sdn. Bhd) நூர் இசாத்தி கைருடின் , பினாங்கு சுற்றுலாத் துறை தலைமை நிர்வாக அதிகாரி உய் சூக் யான், பினாங்கு மாநகர் உயர் அதிகாரி முகமது போரஸ் முகமட் நோர் கலந்து கொண்டனர்.
இவ்விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த குறிப்பாக உள்ளூராட்சி மன்றம், காவல் துறை , தன்னார்வ படை ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார் ஏற்பாட்டு குழுத் தலைவர் நூர் இசாத்தி.
சாலை நெரிசல் சமாளிப்பதற்கு வருகையாளர்களுக்கு போதுமான வாகன நிறுத்துமிடம் , இலவச பேருந்து சேவை, வாடகை கார் ஏற்பாட்டுக் குழு சார்பாக தயார் செய்து தரப்பட்டது.