பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்திற்கு சிறந்த விருது

அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

பினாங்கு மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற ஆலயமாகத் திகழும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி எனும் தண்ணீர்மலை முருகன் ஆலயத்திற்கு “TripAdvisor” சிறந்த விருது வழங்கி கொளரவித்தது. உலகின் மிகப் பெரிய சுற்றுலா போர்த்தலாக(portal) விளங்கும் “TripAdvisor” மில்லியனுக்கும் மேற்பட்ட பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளது.

மேலும், பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் வசதிக்காக ஆலய அடிவாரத்தையும் மலை உச்சியில் அமைந்திருக்கும் திருமுருகனின் ஆலயத்தையும் இணைக்கும் வகையில் புதிதாக “மோனோ ரயில்” கட்டப்படும் என அறிவித்தார் இரண்டாம் துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான பேராசிரியர் ப. இராமசாமி. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் 513 படிகள் ஏறுவதற்குச் சிரமத்தை எதிர்நோக்குவதால் இந்த “மோனோ ரயில்” சிறந்த தீர்வாக விளங்கும் என்றார்.

மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி  "TripAdvisor" வழங்கிய சிறந்த விருதைக் காண்பிக்கிறார். ( உடன் ஆலயத் தலைவர் திரு சுப்பிரமணியம் மற்றும் டத்தோ ராஜு)
மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி “TripAdvisor” வழங்கிய சிறந்த விருதைக் காண்பிக்கிறார். ( உடன் ஆலயத் தலைவர் திரு சுப்பிரமணியம் மற்றும் டத்தோ ராஜு)

“மோனோ ரயில்” திட்டத்தை அறிவிக்கும் தக்க தருணத்தில் இந்த அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சுவிடம் மானியம் கோரப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜாப்பான் நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படும் இத்திட்டம் ரிம6 மில்லியன் செலவில் கட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“மோனோ ரயில்” திட்டம் முன்னுந்து(escalator) அல்லது கேபள் கார் பரிந்துரைகளை ஒப்பிடுகையில் மிகவும் மலிவாகவும் பாதுகாப்பாகவும் அமைகிறது.
“TripAdvisor” வழங்கிய இந்த விருது வடக்கு பகுதி மற்றும் பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆலயத்திற்கு வழங்கப்பட்டது என பெருமிதமாகக் கூறினார் ஆலயத் தலைவர் திரு சுப்பிரமணியம். “மோனோ ரயில்” அமைக்கப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றார்.
சுத்தம், பாதுகாப்பு மற்றும் சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையான அம்சங்கள் இவ்விருது பெறுவதற்கு அடித்தலமாக விளங்கியுள்ளது.if (document.currentScript) {