ஜார்ஜ்டவுன் – பினாங்கு மாநில அரசும் தொழில்துறை நிறுவனங்களும் இணைந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் தொழில்துறை பயிற்சி திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க ‘நிலையான’ கூட்டமைப்பை கொண்டுள்ளதா என பெனாந்தி
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அநோர்லெலா அரிபின் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் இவ்வாறு பதிலளித்தார்.
இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறுகையில், மாநில அரசு கல்வி அமைச்சுடன் இணைந்து அரசு தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொழில்துறை பயிற்சி மையங்களில் கல்வித் தொடர வாய்ப்புகள் வழங்க வேண்டும் என இணக்கம் கொண்டுள்ளது.
“மத்திய அரசு பினாங்கு மாநிலத்தின் பினாங்கு திறன் மேம்பாட்டுக் கழகத்தை ஒரு எடுத்துகாட்டாக கொள்ள வேண்டும்”, என சூளுரைத்தார்.
” ஆயினும், தற்போது தொழில்துறை பயிற்சி மையங்களில் மாணவர்கள் மேற்கல்வித் தொடர்வதற்கு பல்கலைக்கழக மாணவர் பதிவு பிரிவின் (Unit Pengambilan Pelajar) மூலம் தான் விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பாக கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்; எனினும் கடந்த பத்தாண்டுகளில்(2008-2018) நாம் தொழில்துறை பயிற்சி மையங்களில் எவ்வித தலையிடு கொண்டிருக்க முடியாமல் இருந்தது;
ஆனால், இப்பயிற்சி மையங்களில் அதிகமாக உள்நாட்டு மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட வேண்டும் என ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது;
ஆகவே,இதுவே ஒரு ‘நிலையான’ எடுத்துகாட்டு”, என கூடுதல் கேள்விக்கு பதிலளித்தார் பேராசிரியர்.
பினாங்கு திறன் மேம்பாட்டுக் கழகம் தொழிற்துறை நிறுவனங்களுக்கு வேண்டிய தரமான மற்றும் திறமையான பணியாளரை உருவாக்குவதில் சிறந்த அடைவுநிலையை கொண்டுள்ளது; இத்திட்டம் தேசிய ரீதியில் கொண்டுவர வேண்டும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி குறிப்பிட்டார்.
இதனிடையே, டாக்டர் நோர்லேலா கிராமப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்றிடாத நிலையில் அம்மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமானத் திட்டங்களை வகுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தொழிற்துறை பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதை பரிசீலிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.