பினாங்கு தேக் டோம் அறிவியல் மையம் விரைவில் திறக்கப்படும்.

Admin

 

பினாங்கு தேக் டோம் மையத்தை பார்வையிட்டார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஹொங் ஹொன் வாய்.
பினாங்கு தேக் டோம் மையத்தை பார்வையிட்டார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஹொங் ஹொன் வாய்.

பினாங்கு தேக் டோம் எனும் திட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல், தொழில்நுட்ப குவிமாடம் மட்டுமின்றி பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்டறை மற்றும் அறிவியல் முகாம்கள் சிறு குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படவுள்ளன . 40,000 சதுர அடி பரப்பளவில் 120 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் பினாங்குவாழ் மக்களின் நன்மைக்காக மாநில அரசு முயற்சியில் உருவாகி வருகிறது.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இத்திட்டம் ரிம28 மில்லியன் பொருட்செலவில் இவ்வாண்டு ஜூலை மாதம் மேம்பாட்டு வேலைகள் நிறைவடையும் என தெரிவித்தார். திறந்த குத்தகை முறையில் ‘கோக் கொன்ஸ்ட்ரக்‌ஷன்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டேக்-டோம் மூலம் எழுச்சியூட்டும் கண்டுப்பிடிப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கவும் சிறுவர்களிடையே இருக்கும் பல புத்தாக்க திறன்களை வெளிக்கொணரவும் ஒரு மையக்கல்லாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர். பினாங்கு தேக் டோம் ‘எழுச்சியூட்டும் எதிர்காலத்தை உருவாக்குவோம்’ (Inspiring The Future) எனும் கருப்பொருளுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

 பிரமாண்டமாக உருவாக்கப்படும் பினாங்கு தேக் டோம் மையத்தின் ஒரு பகுதி
பிரமாண்டமாக உருவாக்கப்படும் பினாங்கு தேக் டோம் மையத்தின் ஒரு பகுதி

பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த நகரமாக உருவாக்கும் பல அரிய முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. “இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்பதனை உறுதிச்செய்யும் நோக்கத்தில் மாநில அரசு இந்தத் திட்டத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கெடுப்பு அதிகரித்து அனைத்துலக ரீதியில் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் இலக்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.. எனவே, இம்மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைய இன்னும் நிதி தேவைப்படுவதால் மாநில அரசு பொதுமக்கள், அரசு சாரா இயக்கங்கள், பொது அமைப்புகள் என அனைவரது உதவியை நாடுகிறது என மேம்பாட்டுத் திட்டத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கூறினார்.