பினாங்கு பசுமை கண்காட்சி 2013

Admin

2013-ஆம் ஆண்டிற்கான பினாங்கு பசுமை கழகத்தின் ஏற்பாட்டில் பினாங்கு பசுமை கண்காட்சி குடும்ப நாள் மிக விமரிசையாக பல நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இது பிசா அரங்கத்தில் கடந்த 21-22 செப்டம்பர் 2013-யில் நடைபெற்றது. ஒவ்வொரு பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த குடும்ப நாள் அமைந்தது.

இந்த ஆண்டு பினாங்கு அனைத்துலக பசுமை விழா பல திட்டங்கள், கொள்கைகள், தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என்பது திண்ணம். இந்நிகழ்வின் கருப்பொருள் “Heal the Earth, Count me in” ஆகும்.

இந்நிகழ்வில் பினாங்கு மாநிலத்தில் வாழும் 100,000 பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர். மாநில அரசும் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவையை வழங்கியது சாலச் சிறந்ததாகும்.

பினாங்கு பசுமை கண்காட்சி பினாங்கு வாழ் மக்களுக்குப் பிரதானத் தளமாக அமைகிறது

  • சுற்றுசூழல் பற்றியக் கருத்துக்கள், நிலையான வியூகங்கள் மற்றும் நடைமுறைகள், தொழில்நுட்பங்கள், நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஓர் உற்சாகமான மற்றும் ஆக்கப்பூர்வமான தளம்.

  • கல்வி மற்றும் பொழுதுபோக்கு இணைந்து அறிவாற்றலை மேம்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும்

  • சுற்றுசூழல் பசுமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் இந்நிகழ்விற்கு மாநில அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். பினாங்கு வாழ் இம்மாதிரியான நிகழ்விற்கு முழு ஆதரவை வழங்குவதைக் கண்டு அகம் மகிழ்ந்தார். அதோடு, சுகாதாரமான வாழ்க்கை முறையை பேணுவோம் என மேலும் கூறினார்.

பினாங்கு பசுமை கண்காட்சியில் திரண்ட மக்கள் கூட்டம்.
பினாங்கு பசுமை கண்காட்சியில் திரண்ட மக்கள் கூட்டம்.