பினாங்கு பாலம் அனைத்துலக நெடுந்தூர ஓட்டப்போட்டி 2013

Admin

பினாங்கு பாலம் நெடுந்தூர ஓட்டப்போட்டி நமது நாட்டில் மட்டுமின்றி அனைத்துலக ரீதியில் பிரசித்துப்பெற்றது என்றால் மிகையாகாது. இப்போட்டி கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, போர்த்துகல் என 71 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு 47,000 பங்கேற்பாளர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமானப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதால் ‘மலேசியாவிலே பிகப்பெரிய பால நெடுந்தூர ஓட்டப்போட்டி’ என மலேசியா சாதனை புத்தகத்தில் மூன்றாவது முறையாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

:  பினாங்கு பால நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள்.
: பினாங்கு பால நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள்.

 

இப்போட்டியினை பினாங்கு மாநில அரசும் பினாங்கு பாலம் அனைத்துலக நெடுந்தூர  ஓட்டப்போட்டி குழுவினரும் இணைந்து நடத்தினர். இந்த போட்டியில்  திறந்த முழுமையான நெடுந்தூர ஓட்டப்போட்டி,  சிறந்த மலேசியன் நெடுந்தூர ஓட்டப்போட்டி, அரை நெடுந்தூர ஓட்டப்போட்டி மற்றும் 10 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப்போட்டி என  நான்கு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பிரிவுகளில் வெற்றி பெறும் 15 பங்கேற்பாளர்களுக்கும்  ரிம162, 400   ரொக்கப் பணத்தைப் பெறுவர்.

10 கிலோ மீட்டர் ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த தர்மா விஜேந்திரன், பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் அஸ்திரோலியாவைச் சேர்ந்த தமிகா பயினேஸ், ஆண்களுக்கானத் திறந்த பிரிவில் கேன்யா நாட்டைச் சேர்ந்த எலிட் கிப்ருகுட் கேரிங், பெண்களுக்கான திறந்த  பிரிவில் கேன்யா நாட்டைச் சேர்ந்த பைத் வன்ஜிக்கு நுகுனா ஆகியோர் வெற்றி மகுடத்தைச் சூடினர்.

2014-ஆம் ஆண்டுக்கான பினாங்கு பாலம் அனைத்துலக நெடுந்தூர ஓட்டப்போட்டி பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது பாலத்தில் நடைபெறும் என இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் சுற்றுலாத்துறை ஆட்சிக்குழுத் தலைவருமான மதிப்பிற்குரிய டானி லாவ் ஹெங் கியாங் அவர்கள் தெரிவித்தார். இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

திறந்த முழுமையான நெடுந்தூர ஓட்டப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வெற்றிக்கோப்பை மற்றும் மாதிரி காசோலையை வழங்கினார்.
திறந்த முழுமையான நெடுந்தூர ஓட்டப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வெற்றிக்கோப்பை மற்றும் மாதிரி காசோலையை வழங்கினார்.

பினாங்கு மாநில முதல்வர்  பாதுகாப்பு, பசுமை, ஆரோக்கியம், தூய்மை என்ற கோட்பாட்டில் டிராகன் படகு போட்டி, ஸ்குவஸ் போட்டி, நெடுந்தூர ஓட்டப்போட்டி எனப் பல போட்டிகளை ஏற்று நடத்துகின்றனர் என வரவேற்புரையில் சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு 16-11-2014-ஆம் திகதி நடைபெறவிருக்கும் இப்போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் சுற்றுலாத்துறை ஆட்சிக்குழுத் தலைவருமான மதிப்பிற்குரிய டானி லாவ் ஹெங் கியாங் அவர்கள் வரவேற்புரையாற்றினார்
இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் சுற்றுலாத்துறை ஆட்சிக்குழுத் தலைவருமான மதிப்பிற்குரிய டானி லாவ் ஹெங் கியாங் அவர்கள் வரவேற்புரையாற்றினார்

 

 

 

 

 

 

 

 

 

இப்போட்டியில் முழுமையாகக் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நிறைவு பதக்கம் வழங்கப்பட்டன. இப்போட்டியின் முக்கிய ஆதரவாளர்களாகத் தொலைத்தொடர்பு நிறுவனம் டீஜி, ஹொண்ட, ஏமிக்கோ, ஏசிக்ஸ், அலையன்ஸ் காப்புறுதி நிறுவனம் திகழ்ந்தனர்.