பினாங்கு மகளிர் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கு பெண்கள் வியாபாரத் துறையில் ஈடுப்பட வாய்ப்பளிக்கிறது – பேராசிரியர்

Admin

நிபோங் திபால் – “இந்தியப் பெண்கள் வியாபாரத் துறையில் ஈடுப்பட்டு குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்த உந்துசக்தியாகத் திகழ வேண்டும்,,” என பினாங்கு மகளிர் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு கூறினார்.

மேலும், மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் நம்பிக்கை கடனுதவித் திட்டம்அறிமுகம் செய்து பொது மக்கள் வியாபாரத் துறையில் ஈடுப்பட ஊக்குவிக்கிறது. எனவே இந்தியர்கள் குறிப்பாக பெண்கள் வியாபாரத் துறையில் கால் தடம் பதிக்க முன் வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வு இரண்டாம் துணை முதல்வர் அலுவலகம்மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு, வட அழகுநிபுணர் சங்கம் (PEMUA), மற்றும் இந்து அறப்பணி வாரியம் இணை ஏற்பாட்டில் இனிதே நடைபெற்றது.

பினாங்கு மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் இந்தப் பினாங்கு மகளிர் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கு பிரத்தியேகமாக இந்தியர்களுக்காக இரண்டாவது முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. முதல் முறை பிறை வட்டாரத்திலும் இரண்டாவது முறை விக்டோரியா தோட்டத்திலும் நடைபெற்றது.

இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இக்கருத்தரங்கில் வியாபாரத் துறை நுணுக்கங்கள்பினாங்கு மேம்பாட்டுக் கழகம் வழங்கும் கடனுதவித் திட்டம்மின்–வணிகம் ஆகியவை பட்டறையில் எடுத்துரைக்கப்பட்டன

மேலும்வியாபாரத் துறை வழங்கும் வாய்ப்புகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் மட்டுமின்றி விழிப்புணர்வு பற்றியும் மிகச் சிறப்பாக பேச்சாளர் திரு.ராஜ் மோகன் பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தார்.

இக்கருத்தரங்கில் பெண்களுக்கு கைத்தொழில் ஊக்குவிக்கும் பொருட்டு பூச்செண்டு செய்யும் பயிற்சியும் இடம்பெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட 35 பங்கேற்பாளர்களுக்கும் நற்சான்றிதழ் கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இந்து அறப்பணி வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ இராமசந்திரன், துரோபதி அம்மன் ஆலயத் தலைவர் திரு முணியாண்டி, இந்து அறப்பணி வாரிய ஆணையர் திரு கிருஸ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டர்.