பினாங்கு மாநகர் கழக உரிமம் மற்றும் பொது சுகாதார குழு தற்காலிக தலைவரும் அக்கழக கவுன்சிலருமான ஒங் ஆ தியோங் இவ்வாண்டு பிப்ரவரி தொடங்கி உரிமங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியுள்ளதாக பினாங்கு மாநகர் அறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
இப்புதிய திட்டத்தின் வழி வியாபாரிகள் போலி உரிமங்கள் சமர்ப்பிப்பதைத் தவிர்க்க இயலும். பினாங்கு மாநகர் கழகம் வழங்கும் வியாபார உரிமங்களுக்கு ‘பார்கோட்டு‘ உள்ளடக்கியிருக்கும். இதன்வழி, அக்கடைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறந்த சான்றாக இப்புதிய அணுகுமுறை அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். தற்போது 200 வியாபாரிகளுக்கு இப்புதிய உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதன்வழி, பினாங்கு மாநகர் கழக ஊழியர்கள் அக்கடைகளுக்கு நேரடி சோதனைக்கு செல்லும் வேளையில் உரிமையாளர் இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, “பார்கோட்டு” உதவியுடன் வேண்டிய தகவல்களை பெற முடியும்.
பொதுமக்களுக்கு இக்கடை பற்றிய பொது தகவல்களை கையடக்க தொலைபேசி உதவியுடன் பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம்.