பினாங்கு மாநிலத்தில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் அண்மையில் இனிதே விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகை தினத்தை முன்னிட்டு பினாங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல கொடை வள்ளல்கள் ஆண்டுத்தோறும் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பும் பல தொண்டுகளும் வழங்கி வருவது பாராட்டக்குறியதாகும். அனைத்து சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் மூவின மக்களும் கலந்து கொண்டு பினாங்கு மாநிலம் மொழி இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை சித்தரிக்கின்றது.