அண்மையில் மாநில சுகாதார துறை வெளியிட்ட டிங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டோர் அறிக்கையின் படி இவ்வாண்டு தொடக்கம் முதல் 34-வது வாரம் வரை, கடந்த ஆண்டைக் காட்டிலும் 12.3% சரிவு கண்டுள்ளது. இந்த புள்ளி விபரம் 2012-ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவு என்றாலும் கடந்த இரண்டு வாரங்களில் டிங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழிற்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் ஆரோக்கியச் சேவை ஆட்சிக்குழுத் தலைவர் டாக்டர் அஃபீஃப் பஹார்டின் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
டிங்கி காய்ச்சல் அதிகரித்ததைத் தொடர்ந்து இரண்டு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளன. இதில் ஒருவர் மூத்த குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு ஜனவரி முதல் வாரம் தொடக்கம் 34-வது வாரம் வரை மட்டும் 482 வழக்குகள் வரையுறுக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலை மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதால் பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுகோள் விடுத்தார்.
பொது மக்கள் தத்தம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் டிங்கி கொசுக்கள் பரவாமல் இருப்பதை உறுதிச் செய்ய முடியும். மாநிலத்தில் உள்ள 291 கிராம பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு குழுக்கள் தத்தம் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டு முயற்சியில் துப்புரவுப் பணியில் முற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் சட்டமன்ற உறுப்பினர். அதோடு, பொது மக்களுக்கு காய்ச்சல், மூட்டு வலி, பசியின்மை, வாந்தி, உடலில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்பட்டால் உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
டிங்கி காய்ச்சல் அதிகமாக அடையாளம் காணப்பட்ட இடங்கள் கீழ் வருமாறு:
மாவட்டம் | இடம் |
தென்மேற்கு | ஸ்ரீ டெலிமா அடுக்குமாடி |
கொல்ட் கொஸ் அடுக்குமாடி, பாயான் இண்டா | |
பண்டார் பாரு தெலொக் கும்பார் | |
கம்போங் தேற்சுசுன், சுங்கை ஆரா | |
கேர்பாங், சுங்கை ஆரா | |
வடகிழக்கு (ஜோர்ஜ்டவுன்) | சுங்கை பினாங் விரைவுச்சாலை 1 |
தாமான் ஸ்ரீ டாமாய், பத்து லன்சாங் | |
தாமான் ஸ்ரீ பினாங், PPR அடுக்குமாடி, ஜாலான் வெத்னரி | |
தாமான் பெர்ஜாயா, புலாவ் திக்குஸ் | |
வடகிழக்கு | டெசா மாவார், ஆயிர் ஈதாம் |
தாமான் துன் சர்டோன், குளுகோர் | |
ஜாலான் சோங் லை இன், தஞ்சோங் தோகோங் | |
ஸ்ரீ இவோரி, ஆயிர் ஈதாம் | |
சுங்க வீடுகள், குளுகோர் | |
மத்திய செபெராங் பிறை | தாமான் சாய் லேங், பிறை |
தாமான் எமாஸ், பிறை | |
ஜாலான் துனா அடுக்குமாடி, செபெராங் பிறை | |
லோரோங் தெங்கிரி, செபெராங் பிறை | |
காசா பிரிமா, செபெராங் பிறை |