பினாங்கு மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டம்

 

இரண்டாம் துணை முதல்வர் மண் சட்டியில் பால் ஊற்றி பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இரண்டாம் துணை முதல்வர் மண் சட்டியில் பால் ஊற்றி பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தமிழர்களும் தை முதல் நாள் பொங்கல் தினமாக மிக விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இவ்விழா போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து கொண்டாடுகின்றனர். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக் கூடங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் தைப்பொங்கலை பிரமாண்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹாருடின்.
பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹாருடின்.

அவ்வகையில் பினாங்கு மாநில அளவிலான பொங்

மாநில அளவிலான பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பொது மக்கள்
மாநில அளவிலான பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பொது மக்கள்

கல் கொண்டாட்டம் கடந்த 18-ஆம் திகதி பிறை வட்டாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பினாங்கு முத்தமிழ்ச் சங்கம், பினாங்கு இந்து சங்கம், ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ ஆனந்த பவன் உணவகம் ஆகிய 18 அரசு சார இயக்கங்கள் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு இயக்கங்களும் குழு முறையில் பொங்கல் வைத்தனர்.
மூன்று கரும்புகள் பிரமிட் வடிவில் கட்டப்பட்டு, அதற்கு நடுவில் விறகுகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களின் மேல் அலங்கரிக்கப்பட்ட மண் சட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மண்சட்டிக்கு முற்புறம் வண்ண கோலங்கள் இடப்பட்டு அவ்விடமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. மாவிலை, தோரணங்கள் கட்டப்பட்டு விநாயகர் ஆலய வளாகம் இந்தியப் பாரம்பரியத்தை பறைச்சாற்றியது. அதோடு, அந்நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் இந்தியர்களின் பாரம்பரிய நடனங்களான மயிலாட்டம், , பரதநாட்டியம், கோலாட்டம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. வரவேற்புரையாற்றிய பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, இந்நிகழ்வு நான்காவது முறையாக மாநில அளவில் நடைபெறுவதாகவும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் என அறிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் திகதி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கைப்பற்றியது என அறிவித்தார். பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சொத்துகள், நிலம் மற்றும் நிதியத்தைப் பராமரிக்கும் முக்கிய பொறுப்பை வகிப்பதன்றி பிறர் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்காது எனத் தெளிவுப்படுத்தினார். மேலும் இந்து அறப்பணி வாரிய சொத்துடைமைகள் அனைத்தும் வாரியத்திற்கே சொந்தமானது என்றார். பினாங்கு வாழ் பெரும்பான்மை இந்தியர்கள் அறவாரியத்திற்கு மிகுந்த ஆதரவு வழங்குதாகத் தெரிவித்தார்.
இப்பொங்கல் கொண்டாட்டத்தில் வாழ்த்து உரையாற்றிய மாநில முதல்வர் பினாங்கு மாநிலம் பொருளாதார துறையில் மேன்மையடைய சுற்றுலாத் துறை, உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை மேம்படுத்துவதாகக் கூறினார். தெற்கு செபராங் பிறை மேம்பாட்டுத் திட்டம் கூடிய விரைவில் தொடங்கப்பட்டு இப்பகுதி மேலும் வளர்ச்சியடையும் என முதல்வர் தெரிவித்தார். அதோடு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளையும் கூறினார்.
மேலும் செபராங் ஜெயா சட்டமன்றமும் தாமான் செம்பிலாங் சமூக மேம்பாடு மற்றும் பாதுகாப்

இந்திய பாரம்பரிய நடனம் "கோலாட்டம்"
இந்திய பாரம்பரிய நடனம் “கோலாட்டம்”

பு கழகமும் இணைந்து பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். இவ்விழாவில் அனைத்து இன மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதோடு இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹாருடின் சிறப்பு பிரமுகராக வருகையளித்தார். இவ்விழாவில் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான “உறி அடித்தல்” போட்டி நடைபெற்றது