பினாங்கு மாநில நகராண்மைக் கழகத்தின் சேவை அளப்பரியது. இதனை மெருகூட்டும் வகையில் இரண்டு புதிய திட்டத்தைக் கடந்த 9 அக்டோபர் 2013-ல் வாகன நிருத்துமிடங்களில் கூப்பன் முறை மற்றும் முன்செலுத்தும் கருவி முறை (Sistem Alatan Prabayar) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கூப்பன் வாகன நிறுத்தும் முறை வருகின்ற 1 ஜனவரி 2014 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.. முன்செலுத்தும் கருவி முறை (Sistem Alatan Prabayar) திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கி பொதுமக்கள் பயன்படுத்தலாம். இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உள்ளூர் அரசு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரணக் குழுத் தலைவரும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய சாவ் கொன் யாவ் திறந்து வைத்தார்.
இப்புதிய திட்டத்தின் வழி பினாங்கு மாநில மக்கள் இதுவரை எதிர்நோக்கியிருந்த வாகனம் நிறுத்தும் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது. முன்செலுத்தும் கருவி முறையின் வழி பல நன்மைகள் உள்ளன. கணினியில் பதிவு செய்வதால் இதன்வழி சம்மனையும் இணையதளம் மூலம் சரிபார்க்கப்பட முடியும். இத்திட்டம் மலேசியாவிலேயே முதல் புதிய முயற்சியாகும் என்பதில் ஐயமில்லை. இம்முறை வாகன ஓட்டுனர்களின் சுமையைக் குறைக்கின்றது. ஏனெனில், அவர்கள் போதுமான நாணயங்களை எடுத்து வைக்கவோ அல்லது பழுதான மீட்டர்களை சமாளிக்கவோ அவசியமில்லாமல் போவதோடு அவர்கள் சமான்களிலிருந்து விடுப்பட முடியும் என்றார் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சாவ்.
வாகன ஓட்டுனர்கள் கூப்பன் பினாங்கு மாநில முழுவதும் அமைந்திருக்கும் விற்பனையாளர் முகவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். இம்முறை பினாங்கு மாநிலத்திற்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கும் இலகுவாக அமையும்.
இதனிடையே, பினாங்கு வாழ் ஓட்டுனர்கள் தத்தம் ஒரு முன்செலுத்தும் கருவியைப் பெற்றிருப்பதன் வழி இத்திட்டத்தின் வெற்றியை உறுதிச் செய்ய முடியும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் பினாங்கு நகராண்மைக் கழகத்தின் தலைவர் டத்தோ பத்தாயா பின்தி இஸ்மாயிலும் கலந்து சிறப்பித்தார்.