பினாங்கு மாநிலம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் பின் ‘இயல்பான பினாங்கை நோக்கி’ செயல்படும் – முதல்வர்

ஜார்ச்டவுன் – மாநில அரசு கோவிட்-19 போராட்டத்தில் உதவும் நோக்கில் உற்பத்தி துறையை மேம்படுத்த பினாங்கு மேம்பாட்டுக் கழகம் மற்றும் ‘இன்வெஸ் பினாங்கு’ துணை நிற்க வேண்டும்.

பினாங்கு அனைத்துலக உற்பத்தி மையமாகத் திகழ்கிறது என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.

“எங்களிடம் நிபுணத்துவம் மற்றும் திறன் மிக்க தொழிலாளர்கள் உள்ளனர்.

“கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் உபகரணங்கள் (முகக் கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), வென்டிலேட்டர்கள் மற்றும் கை உறைகள் போன்றவை) தயாரிக்க பினாங்கை உற்பத்தி மையமாக நிலைநிறுத்த முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

“கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடும் முன் வரிசை பணியாளர்களுக்கு மாநில அரசு உதவ விரும்புகிறது.

“பினாங்கு மாநிலம் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு உற்பத்தி துறையில் முன்னேற்றம் காண முடியும், இதன் மூலம் அதிகமான வேலை வாய்ப்புகள் மற்றும் மக்களும் கூடுதல் வருமானத்தை ஈட்டுவர்,” என ஸ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாநில முதல்வர் அறிக்கையில் இவ்வாறு கூறினார்.

மாநில அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளது போல இறுதி அமர்வு நடைபெற்ற
ஆறு மாதங்களுக்குள் அடுத்த அமர்வு நடத்தப்பட வேண்டும் என்று சாவ் கூறினார்.

கோவிட் -19 க்கு எதிரான நீண்ட போராட்டத்தில் பொது மக்களுக்கு போதுமான உணவு விநியோகத்தை உறுதிச் செய்வதற்கும் மாநில அரசு தொடர்ந்து செயல்படும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகு மாநில அரசு ‘ இயல்பான பினாங்கை நோக்கி’ செயல்படும். அவ்வகையில், மின் மற்றும் மின்னணுவியல் துறையில் பினாங்கு புத்தாக்கத் திறனுடன் செயல்பட ஊக்குவிக்கப்படும்.

“மத்திய அரசாங்கம் பினாங்கின் குறிக்கோளை பகிர்ந்து கொள்வதோடு நம் நாட்டில் இருக்கும் வளங்கள் கொண்டு நம் நாட்டை வழிநடத்த வேண்டும்.

“டிஜிட்டல் தளத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரச் சீர்த்திருத்தங்களைச் செயல்படுத்த பினாங்கு அரசாங்கம் உறுதியளிக்கிறது; கோவிட் -19 நோய்த்தொற்றின் முடிவுக்குப் பின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தப்படும்,”என்று அவர் கூறினார்.

தொற்றுநோய் முடிவுற்றப் பிறகும் சுகாதார அம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

பினாங்கு வாழ் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க இரு ஊராட்சி மன்றங்களும் பொது இடங்கள் தூய்மையை மேம்படுத்த தனது பணிகளை இரட்டிப்பாகும்.

கோவிட் -19 நோய்த்தொற்று பரவுதல் குறைந்தது இன்னும் 18 மாதங்களுக்கு நீடிக்கும் என்று பல சுகாதார நிபுணர்களின் கருத்து கூறப்படுவதாக சாவ் கூறினார்.

“அனைவரும் பல விஷயங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் குறிப்பாக மக்களின் வாழ்க்கை முறை, வணிகங்கள் மற்றும் அரசாங்கம் நிர்வகிக்கும் முறை ஆகும்.

“டிஜிட்டல்மயமாக்கலின் திறனில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி)Internet of Things (IoT)
, பெரிய தரவு அனலிட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அயராது உழைத்து வரும் முன் வரிசை வீரர்களுக்கு சாவ் நன்றி தெரிவித்தார்.

“நாங்கள் தொடர்ந்து
பொதுமக்களிடமிருந்து
நிதி, உணவு மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் நன்கொடையாகப் பெறுகிறோம்.

” நன்கொடையாளர் அனைவருக்கும் நன்றி.

“கொடைவள்ளல் கொண்ட நல்லுள்ளங்கள் மூலம் இதுவரை கோவிட்-19 நிதியத்தில் ரிம2,408,268.73 பெறப்பட்டன. இந்நிதியம் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. பினாங்கில் எந்த மாவட்டத்திலும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பிக்கப்பட்ட வேண்டிய அவசியமில்லை, என்றார்.

கடந்த மார்ச் மாதம் 25-ஆம் நாள், பொது மக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு மாநில அரசு ‘மக்களுக்கான உதவித்திட்டத்தில்’ ரிம75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தது.

கொவிட் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களுக்கும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மற்றும் மறைந்த சிட்டி ஃபரிதா அர்ஷத் (முன்னாள் தெலுக் பஹாங் சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோருக்கும் மரியாதை செலுத்துவதற்காக மாநில சட்டமன்றம் இரண்டு நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தியது.