கடந்த சில வாரங்களாக பினாங்கு மாநிலத்தில் புகைமூட்டம் ஊடுருவி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனமோட்டிகள், வழிபோக்கர்கள் என அனைவரும் புகைமூட்டத்தால் மூச்சி திணறல் ஏற்பட்டு அவதியுறுகின்றனர். பினாங்கு மாநில தீவுப் பகுதியில் புகை மூட்டத்தின் குறியீடு 84 அதேவேளையில் பெருநிலத்தில் 98 எனக் குறிப்பிட்டார் சமூக நலம், சமூக பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ.
பினாங்கு வாழ் மக்களின் சுகாதாரத்தில் அதிக அக்கரை கொண்ட மாநில அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முக பாதுகாப்பு கவசம் வழங்குவதாகச் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார், ஏனுனில் தொடக்கப் பள்ளி மாணவர்களே அதிகமாக உடல் நலம் பாதிக்கப்படுவர்.
இந்தப் புகை மூட்டம் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலம் வரை நீடிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினார் கூறினார். பினாங்கு மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு புகை மூட்ட பாதிப்பிலிருந்து பாதுகாக்க பல திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
}