பினாங்கு மாநில முதலீடு கடந்த ஏழு ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 93% உயர்வடைந்து ரிம48,211 மில்லியன் பெற்றுள்ளது. அதேவேளையில் 2008-ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் ரிம24,932 மில்லியன் மட்டுமே பதிவுச்செய்யப்பட்டுள்ளது . நேர்மையான அரசு நிர்வாகத்தில் ரிம48,211 மில்லியன்(2008 முதல் 2014 வரை) பெறப்பட்ட நிலையில் 2008-ஆம் ஆண்டுக்கு முன் ரிம24,932 மில்லியன் மட்டுமே பெறப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
இந்தப் புள்ளி விபரம் மக்கள் கூட்டணி அரசிற்கும் கடந்த கால அரசின் நிர்வாகத்திற்கும் வேறுப்பாட்டை சித்தரிக்கிறது என பினாங்கு மேம்பாட்டுக் கழக சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட முதல்வர் தெரிவித்தார் . மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன், டத்தோ ஶ்ரீ பாரிசான் (மாநில செயலாளர்), சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வேய் மற்றும் டத்தோ ரொஸ்லி ஜாபார் ( பினாங்கு மேம்பாட்டிக் கழக நிர்வாகத் தலைவர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பினாங்கு மாநிலம் அடைந்துள்ள முதலீட்டு உயர்வுக்கு 2008-ஆம் ஆண்டுக்கு முன் ஆட்சிப்பீடம் அமைத்த தேசிய முன்னணி தான் காரணம் எனக் கூறும் மாநில எதிர்க்கட்சித் தரப்பினரின் கூற்றை முழுமையாக மறுத்தார் முதல்வர் லிம் குவான் எங். மேலும், தொடக்கக் கால ஆட்சியைக் காட்டிலும் மக்கள் கூட்டணி அரசின் ஆட்சி மிகவும் தரமாகவும் உயர்வாகவும் இருப்பதை மாநில எதிர்க்கட்சித் தரப்பினர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார். மலேசிய அனைத்துலக முதலீட்டு ஆணைய (MIDA) அறிக்கையின் படி பினாங்கு மாநில முதலீடு 2008-ஆம் ஆண்டு ரிம10,156.30 மில்லியன், அதனைத் தொடர்ந்து ரிம2,165.24 மில்லியன் (2009), ரிம12,237.96 மில்லியன் (2010), ரிம9,106.01 மில்லியன் (2011), ரிம2,471.46 (2012), ரிம3,912.26 (2013) மற்றும் ரிம8,162.37 மில்லியன் (2014).
2014-ஆம் ஆண்டு பினாங்கு மாநில அரசு அங்கீகரித்த முதலீட்டு திட்டங்களால் மலேசியாவிலே ஜோகூர் மற்றும் சரவாக் மாநிலத்திற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பினாங்கு மாநிலம் இடம்பெறுவதை முதலீட்டு ஆணையம் உறுதிச்செய்துள்ளது. 2013-ஆம் ஆண்டு நான்காவது இடத்தை வகித்த பினாங்கு மாநிலம் 2014-ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தை அதாவது 109% கூடுதல் முதலீடுச் செய்துள்ளது என்பது வெள்ளிடைமலையே .}