பினாங்கு மாநில அரசு இன்று தொடங்கி நம்பிக்கை கூட்டணி அரசாக பெயர் மாற்றம் காண்பதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். மாநில அரசு நிர்வாகக் குழுவினருடன் ஏகமனதான எடுக்கப்பட்ட முடிவின் பிரதிபலிப்பே நம்பிக்கை கூட்டணி என்றார்.
” மாநில அரசின் நம்பிக்கை கூட்டணி உருவாக்கத்தை வரவேற்பதாகவும், அரசு நிர்வாகக் குழுவினரின் ஏகமனதான முடிவுடன், பினாங்கு மாநில அரசு நம்பிக்கை கூட்டணி மாநில அரசாகத் திகழ்கிறது ” என அறிவித்தார்.
மனித நேயம் கொண்ட நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு நல்க பினாங்கு வாழ் மக்களை அன்போடு வரவேற்பதாகச் செய்தியாளர் கூட்டத்தில் மாநில முதல்வர் கூறினார். மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, சாவ் கொன் யாவ் (போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர்) , ஜெக்டிப் சிங் டியோ (கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர்), ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ மற்றும் அஃபிப் பஹாருடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.} else {