பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவத்தைக் குறைக்கும் முயற்சியில் கடந்த 25-ஆம் திகதி பினாங்கு மாநில தீவு மற்றும் பெருநிலப்பகுதியில் 40 இடங்களில் பினாங்கு மாநில அளவிலானத் துப்புரவுப் பணி (Program Gotong Royong Perdana Penang Sihat) ஏற்பாடுச் செய்யப்பட்டது. இந்நிகழ்வு பினாங்கு செபராங் பிறை நகராண்மைக் கழகம், பினாங்கு நகராண்மைக் கழகம், பினாங்கு சுகாதார துறை, மாநில அரசு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றது. இந்நிகழ்வை செபராங் ஜெயா தெங்கிரி அடுக்குமாடி மண்டபத்தில் இனிதே துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கு மாநில அளவிலானத் துப்புரவுப் பணி இரண்டாவது முறையாக பினாங்கு மாநிலத்தில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் கடந்த ஆண்டு 3141 டிங்கி காய்ச்சல் பதிவுச்செய்யப்பட்டதில் 7 உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். இது 2013-ஆம் ஆண்டைக் காட்டிலும் 200% அதிகமாகும். எனவே, இந்நிலையை களையும் பொருட்டு மாநில அரசு டிங்கி ஆதிக்கம் அதிகம் இருக்கும் இடங்களான கட்டுமான பகுதிகள், கழிவு அகற்றும் இடங்களை அவ்வப்போது கண்கானித்து வருகிறது. இதனிடையே, ஆங்காங்கே விழிப்புணர்வு கருத்தரங்குகள், டிங்கி பரவும் வளாகத்தில் உடனடி நடவடிக்கைகள் நடந்து வருவது பாராட்டக்குரியதாகும்.
அதோடு, “Communication for Behavioral Impact” எனும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் இத்திட்டத்தில் பங்கு பெற்று டிங்கி கொசு பரவுவதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். பொதுமக்கள் வீட்டை மற்றும் சுற்றுப்புரத்தைத் தூய்மையுடனும் நீர் தேங்குவதை தவிர்க்கவும் வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டனர். டிங்கி காய்ச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு மிக அவசியமாகும். காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி, உடலில் சிவப்பு புள்ளிகள் இருப்பதை அறிந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்பட்டது.if (document.currentScript) {