பினாங்கு மாநில சட்டமன்றம் அவசர காலத்தின் போது ஏற்று நடத்த முதல்வர் தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு கடிதம் சமர்ப்பிக்கப்படும் .

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முதல்வர், சாவ் கொன் யாவ் அவசர காலத்தின் போது பினாங்கு மாநில சட்டமன்றத்தை வழி நடத்தும் நோக்கத்தில்  அவரது நிர்வாகம் தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு (எம்.கே.என்) ஒரு கடிதத்தை அனுப்படும் என்று  தெரிவித்தார்.

முதல்வர் கூறுகையில், அவசரகால கட்டளைச் சட்டம் பிரிவு 15 (1) (பி) கீழ், நாடாளுமன்றம் அமர்வு இடம்பெறாவிட்டாலும் மாநில சட்டமன்ற அமர்வுகளை நடத்த முடியும் என்பதை தெளிவாக விளக்குகிறது. பினாங்கு மாநில ஆட்சிக்குழுவின் ஆலோசனையின் பேரில் மாநில ஆளுநர் இந்த தீர்மானத்தை பேரரசரிடம் சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்படும்.

மாநில சட்ட ஆலோசகருக்கு  தேசிய சட்டத்துறை வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“மாநில ஆளுநர் மற்றும் மாமன்னரின் இடையிலான ஆலோசனை செயல்முறை மூலம் அவசர கட்டளைச் சட்டத்தின் 15 (1) (ஆ) பிரிவின் கீழ் மாமன்னர் எந்தவொரு உரிய காரணத்தையும் கருத்தில் கொண்டு செயல்படலாம்.

“கோவிட்-19 தொற்றுநோய் பரவுவது தொடர்பான அவசர கட்டளைக்கு ஏற்ப இந்த அதிகாரங்கள் இந்த சூழல் நிலவுகிறது. மாநில சட்டமன்றம் கூட்டுத்தொடர் தொடங்குவதற்கான பரிந்துரைக்கப்படும்  ஒரு தேதியை  தேசிய பாதுகாப்பு மன்றத்திடம்  முன்கூட்டியே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
“பினாங்கு மாநில அரசு சட்டமன்றத்தை நடத்த அனுமதிக்க கோரி எம்.கே.என்-க்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்புவோம்”, என சென்.கிலஸ் தங்கும்விடுதியில் நடைபெற்ற கூட்டத்தொடரில் மாநில முதல்வர் சாவ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே சாவ் கூறுகையில், சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்த பின்னரே பினாங்கில் தேர்தல் வேட்பாளர்களின் வயது வரம்பு 18-ஆக திருத்துவதற்கு ஒரு தீர்மானத்தை கொண்டு வர முடியும் என்று கூறினார். 15-வது பொதுத் தேர்தலில் மலேசியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ‘வாக்களிப்பு 18’ செயல்படுத்தப்படுவதைக் காண முடியும்.

அதே வேளையில், ஆயிர் புத்தே சட்டமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் முன்னதாக சாவ் கொன் யாவ்  தலைமையில் அவசர நிலை காரணமாக பினாங்கு மாநில சட்டசபை அமர்வுக்கு பதிலாக சிறப்பு சந்திப்பு அமர்வை ஏற்பாடு செய்ததற்காக பாராட்டினார்.

மேலும், பேரரசரின் உத்தரவுக்கு இணங்க நாடாளுமன்றத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற செய்தியை அனைத்து மலேசியர்களுக்கும் கொண்டு செல்ல இந்த சிறப்பு அமர்வு அடிக்கடி நடைபெற வேண்டும், ” என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான குவான் எங் கோரிக்கை விடுத்தார்.