நமது நாடு 59 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்த போதிலும் இலஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆதிக்கமின்றி நாட்டின் நற்பெயர் உலகளவில் பாதிக்காமல் இருப்பதை உறுதிச்செய்ய வேண்டும். மாநில அளவிலான சுதந்திர மாதக் கொண்டாட்டம் மற்றும் தேசிய கொடியைப் பறக்க விடும் பிரச்சாரத்தை தொடக்கி வைத்து மேற்கண்ட கூற்றினைத் தெரிவித்தார் மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் அஸ்னோன். இக்கொண்டாட்டம் நம் அனைவரையும் குறிப்பாக சிறுவர் முதல் முதியவர் வரை மலேசியர்கள் என்ற உணர்வுடன் ஒரு குடைக்குள் நின்று நாட்டுப்பற்றை விதைக்கிறது என்றார் பந்தாய் ஜெரெஜாக் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ முகமது ரஷிட்.
மேலும் இரு மலேசியர்கள் அமெரிக்காவில் ஒரே மலேசிய மேம்பாடு நிறுவனம் மீது வழக்குத் தொடுத்த செயல்பாட்டினைப் புகழ்ந்தார் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முதலாம் துணை முதல்வர். சுதந்திர போராட்ட தியாகிகள் ஆங்கிலேயர்களிடமிருந்து மலேசியாவை மீட்டது போல இவ்விருவரின் செயல் மலேசியர்கள் இழந்த மக்கள் சொத்துடைமை மீட்க வல்லது.
சுதந்திர மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 16-ஆம் திகதி முதல் 16 செப்டம்பர் மாதம் வரை மாநில அளவில் பல நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் என சபாநாயகரும் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினருமான லாவ் சூ கியாங் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரசு துறை தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுக்கும் மாநில முதலாம் துணை முதல்வர் சுதந்திர கொடி வழங்கி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);