பினாங்கு நகரம் மற்றும் கிராம திட்டமிடல் துறையின் (JPBD) ஏற்பாட்டில் மலேசியா முழுவதும் உள்ள மாநிலங்களின் மேல்முறையீட்டு வாரிய உயர்மட்ட மேலாண்மை அதிகாரிகள், அரசு முகமைகள், தனியார் மற்றும் சட்ட பயிற்சியாளர்கள் இருந்து நகர திட்டமிடல் அதிகாரிகள் இக்கருத்தரங்கில் பிரத்தியேகமாக கலந்து கொண்டனர். ஒலிவ் டிரி தங்கும்விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி ரஷிட் பின் அஸ்னோன். இக்கருத்தரங்கில் மலேசியா முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், தனியார் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உள்ளூர் அரசின் மேம்பாட்டுத் திட்டங்களில் அதிருப்தி
கொண்டிருக்கும் பினாங்கு வாழ் மக்கள் பினாங்கு நகரம் மற்றும் கிராம திட்டமிடல் துறையின் கீழ் இயங்கும் முறையீடு வாரியத்தில் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான மின்னியல் முறையீடு திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி ரஷிட் பின் அஸ்னோன் . பினாங்கு மாநில முறையீடு வாரியம் பொதுமக்களிடையே நடுநிலையாளராக இருந்து அவர்களின் கருத்துகளைப் பதிவுச்செய்யவும் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தமது சிறப்புரையில் கேட்டுக்கொண்டார் முதலாம் துணை முதல்வர்.
பொதுமக்கள், அரசு ஊழியர்களிடையே மேலாண்மையை எளிதாக்கவும், தனியார் துறைக்கு உதவும் நோக்கிலும் குறிப்பாக சட்ட பயிற்சியாளர்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் இந்த நாட்டில் முறையீடு வாரியம் எடுக்கும் முடிவுகள் பற்றி ஒரு ஆய்வு செய்யவும் இம்மின்னியல் முறையீடு இலகுவாக அமையும் என்பது வெள்ளிடைமலை. மேல் விபரங்களுக்கு பொதுமக்கள் https://erayuan.penang.gov.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.} else {