பினாங்கு மாநில வியூகத் திட்டங்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்

Admin

 

ஜார்ச்டவுன் – கோவிட்-19 வைரஸ் பரவுவதை எதிர்த்து போராடவும் அதனைக் கட்டுபடுத்தும் அதே வேளையில் மாநில அரசு ‘ இயல்பான பினாங்கை நோக்கி வியூகம் அமைத்தல்’ திட்ட அமலாக்கம் மூலம் அனைத்தையும் சமாளிக்க தயாராகி வருகிறது.

இவ்வியூகத் திட்டத்தில் மாநில அரசு மூன்று முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தும். அவை பினாங்கில் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல்; சுற்றுச்சூழல் அமைப்பை 21-ஆம் நூற்றாண்டின் மாற்றத்திற்கு ஏற்ப ஒருங்கிணைத்தல் ; எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு நெருக்கடியையும் எதிர்கொள்ள வலிமையை மேம்படுத்துதல் ஆகும்,” என முதல்வர் சாவ் கொன் யாவ் இன்று நடைபெற்ற முகநூல் நேரலை செய்தி தொகுப்பில் இதனை விவரித்தார்.

இத்திட்டத்தின் மூலம் பினாங்கின் நிறுவனம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கூறுகளில் முக்கியத்துவம் அளிக்கக்கூடும். இந்த வாரம் மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காண முடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஊராட்சி மன்றங்களின் மின்னியல் உணவு வாங்கும் திட்டம் மற்றும் மின்னியல் ரமலான் சந்தை போன்ற பிரச்சாரங்களின் மூலம் வணிகர்கள் மற்றும் சிறு தொழில் வணிகர்கள் மின் -வணிகம் துறையில் நுழையும் வகையில் இத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே, வருகின்ற ஏப்ரல் மாதம் 18-ஆம் நாள் தொடங்கி பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் மின்னியல் விளையாட்டு மற்றும் வீட்டிலே இருங்கள் லீகா போட்டி (Liga Duduk Rumah) ஆகிய போட்டிகளை நடத்தவிருக்கிறது.

இதனையடுத்து, ஏப்ரல் மாதம் 20-ஆம் நாள் அன்று, பினாங்கு டிஜித்தல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கணினி பொறியாளர்கள், குறியீட்டாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய துறையினர் ஒன்றிணைந்து நாம் எதிர்கொள்ளும் புதிய சவால்களும் தொழில்நுட்ப தீர்வுகளையும் பற்றி விவாதிக்க ‘virtual round table’ பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

ஆகவே, மாநில அரசின் எல்லா முயற்சிகளிலும், ப இந்த நெருக்கடியிலிருந்து வெளிப்பட்டு பினாங்கு தொடர்ந்து முன்னேற்றம் அடைய வழிவகுக்கும் என மாநில முதல்வர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் முன் வரிசை பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக உள்ளதை மாநில முதல்வர் உறுதிப்படுத்தினார். இதுவரை மாநில அரசு 1,311,300 முகக் கவசம், 30,510 சுய பாதுகாப்பு உபகரணம், 309,700 கை மற்றும் கால் உறைகள், வெப்பமானி, கைத்தூய்மி, ஆகிய முக்கிய பொருட்களை அவ்வப்போது வழங்கி வருவது பாராட்டக்குரியதாகும்.

பினாங்கில் இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை 97.84 விழுக்காடு பின்பற்றியுள்ள வேளையில் பினாங்கு காவல்துறையினர் இதனை பின்பற்றத் தவறிய 861 தனிநபர்களை கைதுச் செய்துள்ளதாக அறிவித்தது.