பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் அண்மையில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் துணை முதல்வர் டத்தோ டத்தோ ஹஜி ரஷிட் பின் அஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் 2017-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை முதலீட்டின் மூலம் ரிம9.9 பில்லியன் ஈட்டியுள்ளது. பினாங்கு முதலீட்டை இன்னும் அதிகமாக பெருக்குவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, சிறந்த நிர்வாகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறினார். இதனிடையே, பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் 2016-2020 சிறந்த ஐந்தாண்டு திட்டத்தையும் (pelan strategik) செய்தியாளர்களிடம் கூறினார்.
இது 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும் 130% அதிகரித்துள்ளது. பினாங்கு மாநிலம் மலேசியாவின் முதலீட்டில் இரண்டாவது இடம் வகிப்பது பாராட்டக்குறியதாகும். பினாங்கு மாநிலத்தில் அதிகமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரிம8 பில்லியன் முதலீடு செய்துள்ளனர். இதில் ரிம4.3 பில்லியன் மட்டுமே உள்நாட்டு முதலீட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பினாங்கு மேம்பாட்டுக் கழகம் தனது துரித வளர்ச்சியின் மூலம் பினாங்கு வாழ் மக்களுக்கு மலிவு விலை வீடுகள் அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என தமதுரையில் ஆயிர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான குவான் எங் குறிப்பிட்டார்.